சேய்க்குப்புரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேய்க்குப்புரா
நகரம்
'ஹிரன் மினார் (Hiran Minar)
'ஹிரன் மினார் (Hiran Minar)
நாடுபாக்கிஸ்தான்
மாவட்டம்சேய்க்குப்புரா மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்5,960 km2 (2,300 sq mi)
ஏற்றம்236 m (774 ft)
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்8,57,000
 • Estimate (2006)4,00,000
நேர வலயம்PST (ஒசநே+5)

சேய்க்குப்புரா (Sheikhupura, உருது மொழி: شَيخُوپُورہ‎) நகரம் சேய்க்குப்புரா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கிய தொழில் நகரம் ஆகும். லாகூர் நகருக்கு வடகிழக்கே 35 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[1] இந்நகரம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுள் ஒன்றாகும். இந்நகரம் பொதுவாக கிலா சேய்க்குப்புரா (Qila Sheikhupura) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் முகலாய மன்னர் ஜஹாங்கீர் கட்டிய கோட்டை ஒன்று இந்நகரில் அமைந்துள்ளது. சேய்க்குப்புரா என்பது ஜஹாங்கீரின் மற்றுமொரு பெயரான ஷேய்க்கு (Sheikhu) என்பதிலிருந்து வந்தது. ஜஹாங்கீரின் தந்தையான அக்பர் இப்பெயரைச் சொல்லியே ஜஹாங்கீரை அழைப்பார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேய்க்குப்புரா&oldid=3556000" இருந்து மீள்விக்கப்பட்டது