உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காள சுபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காள சுபா (அல்லது முகலாய வங்காளம்) என்பது முகலாய பேரரசின் பிரிவுகளிலேயே மிகப்பெரியதாகும். இது பெரும்பாலான வங்காளப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. அவற்றுள் தற்போதைய வங்கதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகியவையும் அடங்கும். இது 16 மற்றும் 18ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இருந்தது. உலகின் முக்கியமான வணிக நாடான வங்காள சுல்தானகம் கலைக்கப்பட்ட பிறகு இந்த மாநிலம் உருவாக்கப்பட்டது. முகலாயப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் செல்வச் செழிப்பு மிக்க பகுதியாக வங்காளம் திகழ்ந்தது. இதன் பொருளாதாரமானது தொழில் புரட்சி தொடங்குவதற்கான அறிகுறிகளை காட்டியது.[1]

வங்காள சுபா பல்வேறு இடங்களில் "நாடுகளின் சொர்க்கம்"[2] மற்றும் "வங்காளத்தின் பொற்காலம்"[3][4] என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் அவர்கள் பெற்ற ஊதியம் ஆகியவையாகும். உலகிலேயே அவை உயர்ந்தவையாக இருந்தன.[5] டச்சு நாட்டவர் ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியே இருந்து இறக்குமதி செய்ததில் 40% வங்காள சுபாவில் இருந்தே பெறப்பட்டது.[6][7] வங்காளத்தின் கிழக்கு பகுதியானது ஜவுளி உற்பத்தி மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகிய துறைகளில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.[8] பட்டு, பருத்தி ஆடைகள், எஃகு, சால்ட்பீட்டர், விவசாய மற்றும் தொழில் பொருட்களில் உலகிலேயே முக்கியமான ஏற்றுமதி செய்யும் பகுதியாக இருந்தது.[7] ஆங்கிலேயர்கள் மற்றும் முகலாயர்கள் இடையே போர் ஏற்பட இப்பகுதி காரணமாக இருந்தது.[9][10]

முகலாய வங்காளத்தின் கூக்ளி-சூச்சுராவில் உள்ள டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தொழிற்சாலை. ஓவியர் ஹென்ரிக் வான் சுய்லென்புர்க். ஆண்டு 1665.

18ஆம் நூற்றாண்டில் முகலாய வங்காளமானது வங்காள நவாப்களின் கீழ் ஒரு பகுதியளவு சுதந்திரம் அடைந்த மாநிலமாக உருவாகியது. முதல் தொழில் புரட்சிக்கு நேரடியாக முக்கிய பங்காற்றியது.[11][12][13][14] எனினும் 1757ஆம் ஆண்டு பிளாசிப் போரில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால் வெல்லப்பட்ட பிறகு வங்காளத்தில் தொழில்மயமழிந்தது.[11][12][13][7] இந்த சுபாவானது பிறகு வங்காள மாகாணமாக நிறுவப்பட்டது.

உசாத்துணை

[தொகு]
  1. Lex Heerma van Voss; Els Hiemstra-Kuperus; Elise van Nederveen Meerkerk (2010). "The Long Globalization and Textile Producers in India". The Ashgate Companion to the History of Textile Workers, 1650–2000. Ashgate Publishing. p. 255. ISBN 9780754664284.
  2. Steel, Tim (2014-12-19). "The paradise of nations". Dhaka Tribune இம் மூலத்தில் இருந்து 2019-05-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190517063054/https://www.dhakatribune.com/uncategorized/2014/12/19/the-paradise-of-nations. 
  3. Pakistan Quarterly (in ஆங்கிலம்). 1956.
  4. Islam, Sirajul (1992). History of Bangladesh, 1704-1971: Economic history (in ஆங்கிலம்). Asiatic Society of Bangladesh. ISBN 978-984-512-337-2.
  5. M. Shahid Alam (2016). Poverty From The Wealth of Nations: Integration and Polarization in the Global Economy since 1760. Springer Science+Business Media. p. 32. ISBN 978-0-333-98564-9.
  6. Om Prakash, "Empire, Mughal", in John J. McCusker (ed.), History of World Trade Since 1450, vol. 1, Macmillan Reference USA, 2006, pp. 237–240, World History in Context. Retrieved 3 August 2017
  7. 7.0 7.1 7.2 Khandker, Hissam (31 July 2015). "Which India is claiming to have been colonised?". The Daily Star. http://www.thedailystar.net/op-ed/politics/which-india-claiming-have-been-colonised-119284. 
  8. Indrajit Ray (2011). Bengal Industries and the British Industrial Revolution (1757-1857). Routledge. pp. 57, 90, 174. ISBN 978-1-136-82552-1.
  9. Hasan, Farhat (1991). "Conflict and Cooperation in Anglo-Mughal Trade Relations during the Reign of Aurangzeb". Journal of the Economic and Social History of the Orient 34 (4): 351–360. doi:10.1163/156852091X00058. 
  10. Vaugn, James (September 2017). "John Company Armed: The English East India Company, the Anglo-Mughal War and Absolutist Imperialism, c. 1675–1690". Britain and the World 11 (1). 
  11. 11.0 11.1 Junie T. Tong (2016). Finance and Society in 21st Century China: Chinese Culture Versus Western Markets. CRC Press. p. 151. ISBN 978-1-317-13522-7.
  12. 12.0 12.1 John L. Esposito, ed. (2004). The Islamic World: Past and Present. Vol. Volume 1: Abba - Hist. Oxford University Press. p. 174. ISBN 978-0-19-516520-3. {{cite book}}: |volume= has extra text (help)
  13. 13.0 13.1 Indrajit Ray (2011). Bengal Industries and the British Industrial Revolution (1757-1857). Routledge. pp. 7–10. ISBN 978-1-136-82552-1.
  14. Shombit Sengupta, "Bengal's plunder gifted the British Industrial Revolution", The Financial Express, 8 February 2010

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காள_சுபா&oldid=3777878" இலிருந்து மீள்விக்கப்பட்டது