டிராகன் (சீன சோதிடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டிராகன் சீன சோதிடத்தின் கூறப்படும் ஐந்தாவது இராசிக் குறியீடு ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் ஆடம்பர மற்றும் போராட்ட குனமும், வீரமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

பெயர்க்காரணம்[தொகு]

முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி, முயல் ஆகியவற்றை தொடர்ந்து டிராகன் ஐந்தாவதாக வந்தது. பலம் மிகுந்த பிராணியாக இருந்தபோதும், உலக உயிர்களுக்காக மழையை தர வேண்டி இருந்ததாலும், நான்காவதாக வந்தும் கரையை தொடமுடியாமல் தவித்த முயலுக்கு உதவி செய்ததாலும் டிராகனால் ஐந்தாவதாகத்தான் வர முடிந்தது. இதனால் டிராகனை கடவுள் ஐந்தாவது வருடக்குறியாக அறிவித்தார்.

டிராகன் ஐந்தாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.

இயல்புகள்[தொகு]

   
நேரம் இரவு 7:00 முதல் 9:00 வரை
உரிய திசை கிழக்கு, தென் கிழக்கு
உரிய காலங்கள் வசந்த காலம் (ஏப்ரல்)
நிலையான மூலகம் மரம்
யின்-யான் யான்
ஒத்துப்போகும் விலங்குகள் குரங்கு, எலி, பாம்பு, சேவல்
ஒத்துப்போகாத விலங்குகள் எருது, ஆடு, நாய்


இராசி அம்சங்கள்[தொகு]

   
இராசி எண்கள் 3, 4, 5, 6, 15, 21, 34, 35, 36, 45
இராசி நிறம் மஞ்சள், தங்க நிறம்
இராசிக் கல் செவ்வந்திக்கல்

டிராகன் வருடத்தைய பிரபலங்கள்[தொகு]

டிராகன் வருடத்தில் உதயமான நாடுகள்[தொகு]

இதையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராகன்_(சீன_சோதிடம்)&oldid=3538062" இலிருந்து மீள்விக்கப்பட்டது