உள்ளடக்கத்துக்குச் செல்

விருத்தி (யோகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய சோதிடத்தில் விருத்தி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினோராவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 133° 20' தொடக்கம் 146° 40' வரை "விருத்தி" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "விருத்தி" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "விருத்தி" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.

சமசுக்கிருத மொழியில் வ்ரித்தி (Vriddhi) என்பது வளர்ச்சி அடைதல், பெருகுதல் என்னும் பொருள் கொண்டது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் புதன். ஆட்சித் தேவதை சூரியன்.[1]

குறிப்புகள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]

இவற்றை பார்க்கBSO

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருத்தி_(யோகம்)&oldid=3850776" இலிருந்து மீள்விக்கப்பட்டது