துருவம் (யோகம்)
தோற்றம்
இந்திய சோதிடத்தில் துருவம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பன்னிரண்டாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 146° 40' தொடக்கம் 160° 00' வரை "துருவம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "துருவம்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "துருவம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
சமசுக்கிருத மொழியில் த்ருவ (Dhruva) என்பது உறுதியானது, நிரந்தரமானது என்னும் பொருள் கொண்டது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் கேது. ஆட்சித் தேவதை பூமி.[1]
குறிப்புகள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- Yoga Calculator from astroica.com
- Nitya Birth Yogas Vedic Astrology, Nitya Yogas, Basic Astrology Basics பரணிடப்பட்டது 2013-04-19 at the வந்தவழி இயந்திரம்