அரிசணம் (யோகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய சோதிடத்தில் அரிசணம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினான்காவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 173° 20' தொடக்கம் 186° 40' வரை "அரிசணம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "அரிசணம்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "அரிசணம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.

சமசுக்கிருத மொழியில் ஹர்ஷன (Harshana) என்பது மகிழ்தல் என்னும் பொருள் கொண்டது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் சூரியன். ஆட்சித் தேவதை பாகன்.[1]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசணம்_(யோகம்)&oldid=3232013" இருந்து மீள்விக்கப்பட்டது