விஷ்கம்பம் (யோகம்)
தோற்றம்
(விட்கம்பம் (யோகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய சோதிடத்தில் விஷ்கம்பம் அல்லது விஷ்கும்பம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து முதல் 13 20' விஷ்கம்ப யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகையால் குறிக்கப்படும் கற்பனைப் புள்ளி இந்தக் கோணத்தினூடாகச் செல்லும் நேரத்துக்குரிய யோகம் "விஷ்கம்பம்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் விஷ்கம்ப யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
சமசுக்கிருத மொழியில் விஷ்கும்பம் என்பது நஞ்சுக் கலயம் என்னும் பொருள் கொண்டது. சோதிட நூல்கள் மங்கலம் அல்லாதவை எனக் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் சனி. இதற்குரிய தேவதை யமன்.[1]
குறிப்புகள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- Yoga Calculator from astroica.com
- Nitya Birth Yogas Vedic Astrology, Nitya Yogas, Basic Astrology Basics பரணிடப்பட்டது 2013-04-19 at the வந்தவழி இயந்திரம்