இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்
குறிப்பிட்ட நாள்மீன் கூட்டம், அல்லது நட்சத்திரம் என்பது, இராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர். ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் இரேவதி நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.
முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 பாகை அளவுள்ளது.13.33 பாகை என்பது 13o, 20 பாகைத்துளி (நிமிடவளைவுகள்). (1 பாகை= 60 பாகைத்துளி (நிமிடவளைவுகள்)).
பாதம்
[தொகு]புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை. ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.
அட்டவணை
[தொகு]கீழேயுள்ள அட்டவணை நட்சத்திரங்களையும், பாதங்களையும், அவற்றோடொத்த இராசிகளையும் சூரியன் அந்த இராசிகளில் உள்ள மாதங்களையும் காட்டுகின்றது.
நட்சத்திரம் | தமிழ்ப் பெயர் | பாதம் | இராசி | இராசிக்கான தமிழ் மாதம் |
---|---|---|---|---|
1. அச்சுவினி | புரவி | முதலாம் பாதம் | மேடம் | சித்திரை |
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
2. பரணி | அடுப்பு | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
3. கிருத்திகை | ஆரல் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | இடபம் | வைகாசி | ||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
4. ரோகிணி | சகடு | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
5. மிருகசீரிடம் | மான்றலை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | மிதுனம் | ஆனி | ||
நான்காம் பாதம் | ||||
6. திருவாதிரை | மூதிரை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
7. புனர்பூசம் | கழை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | கடகம் | ஆடி | ||
8. பூசம் | காற்குளம் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
9. ஆயிலியம் | கட்செவி | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
10. மகம் | கொடுநுகம் | முதலாம் பாதம் | சிம்மம் | ஆவணி |
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
11. பூரம் | கணை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
12. உத்தரம் | உத்தரம் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | கன்னி | புரட்டாசி | ||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
13. அத்தம் | கை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
14. சித்திரை | அறுவை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | துலாம் | ஐப்பசி | ||
நான்காம் பாதம் | ||||
15. சுவாதி | விளக்கு | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
16. விசாகம் | முறம் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | விருச்சிகம் | கார்த்திகை | ||
17. அனுசம் | பனை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
18. கேட்டை | துளங்கொளி | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
19. மூலம் | குருகு | முதலாம் பாதம் | தனுசு | மார்கழி |
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
20. பூராடம் | உடைகுளம் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
21. உத்திராடம் | கடைக் குளம் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | மகரம் | தை | ||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
22. திருவோணம் | முக்கோல் | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
23. அவிட்டம் | காக்கை | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | கும்பம் | மாசி | ||
நான்காம் பாதம் | ||||
24. சதயம் | செக்கு | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
25. பூரட்டாதி | நாழி | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | மீனம் | பங்குனி | ||
26. உத்திரட்டாதி | முரசு | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் | ||||
27. ரேவதி | தோணி[1] | முதலாம் பாதம் | ||
இரண்டாம் பாதம் | ||||
மூன்றாம் பாதம் | ||||
நான்காம் பாதம் |
தமிழ் பெயர்கள்
[தொகு]அசுவனி முதல் ரேவதி வரையான 27 தமிழ் நட்சத்திரங்களின் வடிவங்கள் புரவி, அடுப்பு, ஆரல், சக்கரம், மான்தலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்[2].
வடமொழி சொற்களுக்கு தமிழ் பொருள்
[தொகு]- அசுவினி - குதிரைத்தலை
- பரணி - தாங்கிப்பிடிப்பது
- கிருத்திகை - வெட்டுவது
- உரோகிணி - சிவப்பானது
- மிருகசீரிடம் - மான் தலை
- திருவாதிரை - ஈரமானது
- புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி
- பூசம் - வளம் பெருக்குவது
- ஆயில்யம் - தழுவிக்கொள்வது
- மகம் - மகத்தானது
- பூரம் - பாராட்டத் தகுந்தது
- உத்திரம் - சிறப்பானது
- அசுதம் - கை
- சித்திரை - ஒளி வீசுவது
- சுவாதி - சுதந்தரமானது
- விசாகம் - பிளவுபட்டது
- அனுடம் - வெற்றி
- கேட்டை - மூத்தது
- மூலம் - வேர்
- பூராடம் - முந்தைய வெற்றி
- உத்திராடம் - பிந்தைய வெற்றி
- திருவோணம் - படிப்பறிவு உடையது, காது
- அவிட்டம் - பணக்காரன்
- சதயம் - நூறு மருத்துவர்கள்
- பூரட்டாதி - முன் மங்கள பாதம்
- உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
- இரேவதி - செல்வம் மிகுந்தது
நட்சத்திர அதிபதிகள்
[தொகு]நட்சத்திர அதிபதி அட்டவணை
[தொகு]- கேது – அசுவினி, மகம், மூலம்
- சுக்ரன் - பரணி, பூரம், பூராடம்
- சூரியன் – கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
- சந்திரன் – உரோகிணி, அத்தம், திருவோணம்,
- செவ்வாய் – மிருகசீரிடம், சித்திர, அவிட்டம்
- இராகு – திருவாதிரை, சுவாதி, சதயம்
- குரு – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
- சனி – பூசம், அனுடம், உத்திரட்டாதி
- புதன் – ஆயில்யம், கேட்டை, ரேவதி
- இராசி அதிபதி
ஒவ்வொரு இராசிக்கும் அதனை இயக்கம் கிரகங்கள் இராசி அதிபதி ஆவார்கள் (இராகு கேது தவிர)
- செவ்வாய் – மேசம், விருச்சிகம்
- புதன் – மிதுனம், கன்னி
- குரு – தனுசு, மீனம்
- சுக்கிரன் – இரிடபம், துலாம்
- சனி – மகரம், கும்பம்
- சூரியன் – சிம்மம்
- சந்திரன் – கடகம்
நட்சத்திர அதிபதிகள்
[தொகு]- அசுவினி - கேது
- பரணி - சுக்கிரன்
- கிருத்திகை - சூரியன்
- உரோகிணி - சந்திரன்
- மிருகசீரிடம் - செவ்வாய்
- திருவாதிரை - இராகு
- புனர்பூசம் - குரு (வியாழன்)
- பூசம் - சனி
- ஆயில்யம் - புதன்
- மகம் - கேது
- பூரம் - சுக்கிரன்
- உத்திரம் - சூரியன்
- அசுதம் - சந்திரன்
- சித்திரை - செவ்வாய்
- சுவாதி - இராகு
- விசாகம் - குரு (வியாழன்)
- அனுடம் - சனி
- கேட்டை - புதன்
- மூலம் - கேது
- பூராடம் - சுக்கிரன்
- உத்திராடம் - சூரியன்
- திருவோணம் - சந்திரன்
- அவிட்டம் - செவ்வாய்
- சதயம் - இராகு
- பூரட்டாதி - குரு (வியாழன்)
- உத்திரட்டாதி - சனி
- இரேவதி - புதன் [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். "வானநூல் (வானநூல்)". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 12, 2012.
- ↑ தென்சொற் கட்டுரைகள் பக்கம்-72
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2752 27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்