கீதா பிரஸ்
துவங்கப்பட்டது | 29 ஏப்ரல் 1923 கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
துவங்கியவர் | ஜெய் தயாள் கோயங்கா, கன்ஷியாம் தாஸ் ஜலான், சிறீ அனுமன் பிரசாத் போதர் |
நாடு | இந்தியா |
தலைமையகம் | கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
பரவல் | உலகம் முழுவதும் |
வெளியிடும் வகைகள் | இந்து சமய நூல்கள் மற்றும் நல்வாழ்வுக்கான நூல்கள் |
தலைப்புகள் | சனாதன தர்மம் அல்லது இந்து சமயம் |
ஊழியர்களின் எண்ணிக்கை | 350 |
அதிகாரப்பூர்வ இணைத்தளம் |
|

கீதா பிரஸ் (Gita Press), இந்து சமய சாத்திரங்கள், காவியங்கள், தர்ம சாத்திரங்கள் அனைத்தும் முக்கிய உலக மொழிகளில் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிடுகிறது.[1] இந்து சமயத்தின் தத்துவங்கள், தர்ம சாத்திரங்கள் உலக மக்களுக்கு எடுத்துரைக்க, கீதா பிரசை 29 ஏப்ரல் 1923 அன்று நிறுவப்பட்டது. இதன் நிறுவனர்கள் ஜெய தயாள் கோயங்கா, கன்ஷியாம் தாஸ் ஜலான் மற்றும் சிறீ அனுமன் பிரசாத் போதர் ஆவார். கீதா பிரசின் தலைமையகம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் நகரத்தில் செயல்படுகிறது. கீதா பிரஸ் இந்து சமயம் மற்றும் நீதி நூல்களை வெளியிடுவதுடன், மாத இதழ்களையும் பல மொழிகளில் வெளியிடுகிறது.[2]இதுவரை கீதா பிரஸ் 3,500 சமய சாத்திரங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளதுடன், பகவத் கீதை தொடர்பாக சிறிதும், பெரிதுமாக 100 விளக்க நூல்களை வெளியிட்டுள்ளது.[3]
வெளியீடுகள்[தொகு]
மாத இதழ்கள்[தொகு]
கீதா பிரஸ் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மாதந்தோறும் வெளியிடும் இதழ்களுக்கு கட்டணம் செலுத்தி படிக்கும் இதழ்களாகும்.[4]
- கல்யாண் (இந்தி மொழியில்), மாத இதழ், 1927 முதல், இந்து சமயக் கருத்துகள், இந்து சமய சாதுக்கள் மற்றும் நீதிக் கதைகள் குறித்து வெளியாகிறது.
- கல்யாண் கல்பதரு (ஆங்கிலத்தில்), மாத இதழ், 1934-ஆம் ஆண்டு முதல் இந்தி மொழியில் வெளியாகும் கல்யாண் இதழ் போன்று வெளியாகிறது.
இந்து சமய நூல்கள்[தொகு]
ஆங்கிலம், சமசுகிருதம், இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒரியா, குஜராத்தி, வங்காளம் மற்றும் பிற இந்திய மொழிகளில் கீதா பிரஸ் இந்து சமய நூல்களை மிகக் குறைந்த விலையில் வெளியிடுகிறது.
- பகவத் கீதை (பல வடிவங்களில்)
- மகாபாரதம்
- துளசிதாசர் எழுதிய இராமாயணம் (பல வடிவங்களில்)[5]
- துளசிதாசரின் பிற நூல்கள்
- வால்மீகி எழுதிய இராமாயணம்]] (பல வடிவங்களில்)
- சாத்திரங்கள்: உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் தர்ம சாத்திரங்கள்
- சூர்தாசரின் ப்கதிப் பாடல்கள்
- ஜெய் தயாள் கோயங்காவின் நூல்கள்
பிற வெளியீடுகள்[தொகு]
- பக்தர்களின் கதைகள் மற்றும் பக்தி கீதங்கள்
- குழந்தைகளுக்கான சிறு நூல்கள்
கீதா பிரசின் கிளைகள்[தொகு]
கீதா பிரஸ் நூல் வெளியிட்டு நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கிளைகள் உள்ள்து. குறிப்பிட்ட சில தொடருந்து நிலையங்களில் நூல் விற்பனைக் கடைகள் உள்ளது.
பெங்களூரு | கர்நாடகா | 7/3, இரண்டாம் குறுக்கு, லால்பாக் சாலை, பெங்களூரு – 560027 | பெங்களூர், யஷ்வந்த்பூர், SSPN, ஹூப்ளி |
கட்டக் | ஒடிசா | பாரதிய டவர்ஸ், பதாம் படி, கட்டக் – 753009 | கட்டக், புவனேஸ்வர் |
தில்லி | தில்லி | 2609, புது சரக், தில்லி – 110006 | தில்லி, நிஜாமுத்தீன் |
அரித்துவார் | உத்தராகண்ட் | சப்ஜிமண்டி, மோதி பஜார், அரித்துவார் – 249401 | அரித்துவார். |
ஐதராபாத் | தெலுங்கானா | 41, 4-4-1, தில்சத் பிளாஷா, சுல்தான் பஜார், ஐதராபாத் – 500095 | செக்கந்திராபாத் -விஜயவாடா |
இந்தூர் | மத்தியப் பிரதேசம் | G-5, சிறீ வர்தன், 4 R.N.T. மார்க், இந்தூர் – 452001 | இந்தூர் |
ஜள்காவ் | மகாராட்டிரா | 7, பீம் சிங் மார்கெட், தொடருந்து நிலையம் அருகில், ஜள்காவ் – 425001 | அவரங்காபாத் |
கான்பூர் | உத்தரப் பிரதேசம் | 24/55, பிர்கானா சாலை, கான்பூர் – 208001 | கான்பூர், லக்னோ, கோட்டா |
கொல்கத்தா | மேற்கு வங்காளம் | 151, மகாத்மா காந்தி சாலை, கொல்கத்தா – 700007 | கொல்கத்தா, ஹவுரா, சியால்டா, தன்பாத், கரக்பூர் |
நாக்பூர் | மகாராட்டிரா] | சிறீஜி கிருபா வளாகம், 851, புது எட்டாவரி சாலை, நாக்பூர் – 440002 | கோண்டியா |
பாட்னா | பிகார் | அசோகர் இராஜபத், மகளிர் மருத்துவமனை எதிரில், பாட்னா – 800004 | பாட்னா |
ராய்ப்பூர் | சத்தீஷ்கர் | மிட்டாய் வளாகம்,கஞ்ச்பாரா, தேல்கானி சதுக்கம், ராய்ப்பூர் – 492009 | இராய்ப்பூர் |
ராஞ்சி | ஜார்கண்ட் | கார்ட் சராய் சாலை, மேல் பஜார், பிர்லா கட்டி, ராஞ்சி – 834001 | ராஞ்சி |
சூரத் | குஜராத் | வைபவ் அபார்ட்மெண்ட், நூதன் நிவாஸ் எதிரில், பதர் சாலை, சூரத் – 395001 | அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர், பரூச், நாடியாத் |
வாரணாசி | உத்தரப் பிரதேசம் | 59/9, நிச்சிபாக்Nichibag, வாரணாசி – 221001 | முகல்சராய் |
கோரக்பூர் | உத்தரப் பிரதேசம் | கீதா பிரஸ் அஞ்சலகம, கோரக்பூர் – 273005 | சாப்ரா, சிவான், முசாபர்பூர், கோரக்பூர், கோண்டியா, ஜபல்பூர், சமஸ்திபூர் |
தொடர்புடைய நிறுவனங்கள்[தொகு]
- கீதா பவன், முனி கி ரெட்டி, ரிஷிகேஷ்
- ரிஷ்கேஷ்-பிரம்மச்சாரிய ஆஸ்ரமம், (வேத பாடசாலை), சூரூ, இராஜஸ்தான்
- ஆயுர்வேதி சன்ஸ்தான் (ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி நிலையம், ரிஷ்கேஷ்)
- கீதா பிரஸ் தேவா தளம் (இயற்கை பேரிடர் நிவாரண அமைப்பு)
- ஹஸ்தா நிர்மிதி வஸ்திர விபாக் (கைத்தறி துணிகள் உற்பத்தி நிலையம்)
- பாரதிய கிராமிய துணிக்கடை (சில்லறை விற்பனை கடை, மும்பை)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Encyclopædia Britannica.
- ↑ Hanuman Prasad Poddar பரணிடப்பட்டது 2010-02-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Holy word இந்தியா டுடே, 20 December 2007.
- ↑ [https://web.archive.org/web/20220205082149/https://www.gitapress.org/product-category/subscription/ பரணிடப்பட்டது 2022-02-05 at the வந்தவழி இயந்திரம் Online Kalyana and Kalyana-Kalptaru Subscription]]
- ↑ "Thulasidas Ramayana". தி இந்து. 21 May 2002. https://www.thehindu.com/br/2002/05/21/stories/2002052100120303.htm. பார்த்த நாள்: 5 July 2018.