உள்ளடக்கத்துக்குச் செல்

சிப்கோ இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிப்கோ இயக்கம் (Chipko movement) சூழல் காப்பிற்கு ஆதரமாக காடுகளைக் காக்கும் இயக்கம்[1][2]. மரங்களை வெட்ட வருவோரைத் தடுத்து மரங்களைக் கட்டித் தழுவியபடி காக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டதனால், இதற்கு சிப்கோ அந்தோலன் (CHIPKO ANDOLAN) என்று பெயர்.

தொடக்கம்

[தொகு]

இவ்வியக்கத்தை தோற்றுவித்தவர் ஜாம்போஜி என்னும் ராஜபுத்திரர் ஆவார். ராஜஸ்தான் மாநிலத்தில், நாகார் மாவட்டத்தில் உள்ள பிப்பசார் கிராமத்தில் வாழ்ந்த வசதிமிக்க செல்வந்தர் ஜாம்போஜி. திருமணம் செய்து கொள்ளாது வாழ்ந்த இவர் உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பும் கருணையும் காட்டி வாழ்ந்தவர். ஜாம்போஜிக்கு 25 வயதான போது மழைவளம் குன்றி அவர் கிராமம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. மக்கள் கெஜ்ரி மரங்களை விறகுக்காக வெட்டி விற்று பிழைத்தனர். இறைச்சிக்காக சின்காரா என்னும் பாலைவன மான், வெளிமான் போன்ற மான்களை வேட்டையாடினர். இதனை கண்டு வருந்திய ஜாம்போஜி அதற்கு மாற்றுக் காண முயன்றார். இயற்கையை அழிக்காமல், இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கைக்கு மக்களை தயார்ப்படுத்தினார்.

தோற்றம்

[தொகு]

கி.பி. 1524ல் அவர் பிஷ்னாய் அமைப்பைத் தோற்றுவித்தார். அதற்கான 29கோட்பாடுகளை வகுத்தளித்தார். பிஷ்னாய் என்றால் கோட்பாடுகளைபின் பற்றுபவர்கள் என்று பொருள். இதற்காக தன் செல்வங்களை முழுமையாக செலவளித்தார். அனைவரும் அவரது கட்டளைக்கு இணங்கி செயல்பட்டனர்.

கோட்பாடுகள்

[தொகு]

29 கோட்பாடுகளில் 8 கோட்பாடுகள் உயிரியப் பன்மையைப் (diversity) பாதுகாப்பதற்கும், பண்ணைகளில் வளர்க்கும் விலங்குகளைக் காப்பதற்கும் முக்கியத்துவம் அளித்தன. இதனால் மரங்கள் வெட்டப்படாது காக்கப்பட்டன. விலங்குகள் பேணப்பட்டன. உணவுக்கென காய்கறிகளை விளைத்து கொண்ட மக்கள் குடிப்பழக்கத்தையும் , புகைப்பிடித்தலையும் தவிர்த்தனர்.

இறந்த பிறகு சடலங்களை எரிப்பது சூழலுக்கு தீங்களிப்பது என்பதால் புதைக்கும் போக்கும் அவர்களிடத்தில் நிலவின. சடலங்களை புதைப்பதால் மரங்கள் வெட்டப்படுவதும் தவிர்க்கப்பட்டது.

பிஷ்னாய் மக்கள் வாழும் பகுதிகள்

[தொகு]

காலப்போக்கில் பிஷ்னாய்ப் பிரிவினர் இந்தியாவின் பலபகுதிகளில் பரவினர். ராஜஸ்தானின் மேற்கு பகுதியிலும், பஞ்சாப், ஹரியானா, உத்ராஞ்ஜல் பகுதியிலும் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்கோ_இயக்கம்&oldid=3286980" இலிருந்து மீள்விக்கப்பட்டது