ஏ. டி. ஆரியரத்தினா
Appearance
ஏ. டி. ஆரியரத்தினா A.T. Ariyaratne ඒ.ටී. ආරියරත්න | |
---|---|
பிறப்பு | அகங்கமகே டியூடர் ஆரியரத்தினா 5 நவம்பர் 1931 உனவத்துன, காலி மாவட்டம், இலங்கை |
இறப்பு | 16 ஏப்ரல் 2024 கொழும்பு, இலங்கை | (அகவை 92)
படித்த கல்வி நிறுவனங்கள் | மகிந்த கல்லூரி, காலி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | சர்வோதயா சிரமதான இயக்கத்தை நிறுவியவர் |
பிள்ளைகள் | 6 |
சிறீ லங்காபிமான்ய அகங்கமகே டியூடர் அரியரத்தினா (Ahangamage Tudor Ariyaratne, சிங்களம்: අහන්ගමගේ ටියුඩර් ආරියරත්න, 5 நவம்பர் 1931 – 16 ஏப்ரல் 2024) இலங்கை செயற்பாட்டாளரும், சர்வோதய இயக்கத்தைப் பின்பற்றி இலங்கையில் 1958 ஆம் ஆண்டில் சர்வோதய சிரமதான இயக்கத்தை நிறுவியவரும்[1] ஆவார். இவர் 2015 செப்டம்பர் 10 இல் இலங்கை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2] பௌத்த அறிஞரும், காந்தியவாதியுமான இவருக்கு 1969-ல் ரமோன் மக்சேசே விருதும், 1991-இல் ஜம்னாலால் பஜாஜ் விருதும்[3], 1996-இல் காந்தி அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
மறைவு
[தொகு]ஆரியரத்தினா 2024 ஏப்பிரல் 16 அன்று தனது 92-ஆவது அகவையில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Founder of the Sarvodaya Shramadana Movement of Sri Lanka
- ↑ Civil Representatives nominated to Constitutional Council பரணிடப்பட்டது 2 சூன் 2016 at the வந்தவழி இயந்திரம், News.lk
- ↑ "Jamnalal Bajaj Award". Jamnalal Bajaj Foundation. 2015. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sarvodaya Shramadana Movement Founder A.T. Ariyaratne passes away". Daily Mirror. 16 April 2024.
நூற்பட்டியல்
[தொகு]- Ariyaratne, A. T. "A. T. Ariyaratne: Collected Works Volume 1". Netherlands, 1978.
- Ariyaratne, A. T. "Buddhist Economics in Practice in the Sarvodaya Shramadana Movement of Sri Lanka". New York: Sarvodaya Support Group, 1999.
- Ariyaratne, A. T. "Religious Path to Peace and Building a Just World". Sarvodaya P, 1984.
- Ariyaratne, A.T. "Schumacher lectures on Buddhist economics". Ratmalana: Sarvodaya Vishva Lekha, 1999.
- Bond, George. "Buddhism at Work: Community Development, Social Empowerment and the Sarvodaya Movement". Kumarian P, 2003.
- "Fifty key thinkers on development". New York: Routledge, 2006.
- Liyanage, Gunadasa. "Revolution under the breadfruit tree: The story of Sarvodaya Shramadana Movement and its founder Dr. A.T. Ariyaratne". Sinha, 1988.