வாக்லாவ் அவொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாக்லாவ் அவொல்
Václav Havel
Václav Havel.jpg
செக் குடியரசுத் தலைவர்
பதவியில்
2 பெப்ரவரி 1993 – 2 பெப்ரவரி 2003
பிரதமர் வாக்லாவ் கிளாஸ்
யோசஃப் டோசோவ்ஸ்கி
மிலோஸ் செமான்
விளாடிமிர் ஸ்பைட்லா
முன்னவர் பதவி உருவானது
பின்வந்தவர் வாக்லாவ் கிளாஸ்
செக்கோஸ்லோவேகியா அதிபர்
பதவியில்
29 திசம்பர் 1989 – 20 யூலை 1992
பிரதமர் மாரியன் கால்ஃபா
யான் ஸ்ட்ராஸ்கி
முன்னவர் மாரியன் கால்ஃபா (பொறுப்பு)
பின்வந்தவர் யான் ஸ்ட்ராஸ்கி (பொறுப்பு)
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 5, 1936(1936-10-05)
பிராகா, செக்லோஸ்வேகியா
(தற்போதைய செக் குடியரசு)
இறப்பு 18 திசம்பர் 2011(2011-12-18) (அகவை 75)
இராடெசெக், செக் குடியரசு
அரசியல் கட்சி குடிசார் மன்றம் (1989–1993)
ஆதரவு - பசுமைக் கட்சி (செக் குடியரசு) (2004–2011)
வாழ்க்கை துணைவர்(கள்) ஓல்கா ஸ்ப்ளைசலோவா (1964–1996)
தாக்மார் வெஸ்க்ர்னோவா (1997–2011)
படித்த கல்வி நிறுவனங்கள் செக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பிராகா
கையொப்பம்
இணையம் www.vaclavhavel.cz
www.vaclavhavel-library.org

வாக்லாவ் அவொல் (About this soundVáclav Havel ) (5 அக்டோபர் 1936 – 18 திசம்பர் 2011) ஓர் செக் நாட்டு நாடகாசிரியர், எழுத்தாளர், கவிஞர், எதிர்ப்பாளர் மற்றும் அரசியல்வாதி என விளங்கியவர். செக்கோஸ்லோவேகியா நாட்டின் பத்தாவது மற்றும் கடைசி அதிபராகவும் (1989–92) புதியதாக உருவான செக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவராகவும் (1993–2003) விளங்கியவர். இவரது 20 நாடகங்களும் பல அபுதினங்களும் பன்னாட்டளவில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக அறியப்படுகின்றன. இவருக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் சுதந்தர பதக்கம், பிலடெல்பியா விடுதலை பதக்கம், கனாடா விருது போன்ற பல விருதுகளும் பெருமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய உள்ளுணர்வு மற்றும் பொதுவுடமைக்கான பிராகா சாற்றுரையை வரைந்து ஒப்பமிட்டவர்களில் ஒருவர்.[1] தமது இறப்பின்போது நியூயார்க்கைத் தலைநகராகக் கொண்ட மனித உரிமைகள் நிறுவனத்தின் தலைவராக விளங்கினார்.

1960களில் நாட்டின் அரசியலில் ஈடுபாடு கொண்ட அவொல் 1977ஆம் ஆண்டு மனித உரிமைகள் கொள்கை அறிவிக்கை மூலம் பன்னாட்டளவில் செக்லோஸ்வேகியாவின் எதிர்ப்பாளர்களின் முதன்மை தலைவராக அறியப்பட்டார். அதுவே அவர் சிறைபடவும் வழிவகுத்தது. 1989ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னர் அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றார். இவர் நாட்டின் அதிபராக விளங்கிய பதின்மூன்றாண்டுகளில் செக்கோஸ்லோவேகியாவிலிருந்து சிலோவாக்கியா, இவரது எதிர்ப்புகளுக்கு இடையே, பிரிந்து செக் குடியரசு உருவானது. செக் குடியரசு ஓர் பல கட்சி சனநாயக அரசாக மலர பெரிதும் காரணமாக இருந்தார். நாடோவுடன் இணைந்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான சந்திப்புகளை துவக்கினார்; 2004ஆம் ஆண்டு செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாயிற்று.

வாக்லாவ் அவொல் (2010)

மேலும் அறிய[தொகு]

ஆக்கங்கள்
ஊடக நேர்காணல்கள்
நூல்கள் (வாழ்க்கை வரலாறுகள்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prague Declaration – Declaration Text" (3 June 2008). பார்த்த நாள் 28 January 2010.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Václav Havel
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்லாவ்_அவொல்&oldid=3270100" இருந்து மீள்விக்கப்பட்டது