பாட்டியாலா சல்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டியாலா சல்வார்

பாட்டியாலா சல்வார் (Patiala salwar) பட்டியான் வாலீ பல்வார் என்றும் அழைக்கப்படுகிறது. உருதுவில் ஷால்வார் எனவும் உச்சரிக்கப்படுகிறது.)

இது பெண்கள் அணியக்கூடிய ஒரு வகையான கால்சட்டை ஆகும். இதன் கலாச்சார வேர் பஞ்சாப் மாநிலத்தின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பாட்டியாலா நகரத்தைச் சேர்ந்தது. பாட்டியாலா சல்வார் ஒரு காலத்தில் பழங்கால பட்டியாலா அரச குடும்பத்தாரின் ஆடம்பர உடையாக இருந்தது. பாட்டியாலா சல்வார் என அழைக்கப்படும் ஆடை முழங்காலில் நீண்டதாகவும் தளர்வானதாகவும் இருக்கும்.

பாட்டியாலாவுக்கும் கமீஸ் ஆடைக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது. கமீஸ் ஆடை சமீப காலங்களில் ஆண்கள் அணியும் ஆடையாக உள்ளது. ஆனால் பாட்டியாலா சல்வார் பெண்கள் அணியும் பாரம்பரிய ஆடையாக புதிய வெட்டுக்கள் மற்றும் ஒயிலோடு தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது.

பாட்டியாலா ஆடையை பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். இதற்குக் காரணம் கோடையில் அதன் வசதித்தன்மை ஆகும். பாட்டியாலா சல்வார் மிகவும் தளர்வான ஆடை என்பதால் அணிய மிகவும் வசதியாக உள்ளதோடு மடிப்புகளோடு அழகாகவும் உள்ளதும் அதன் மடிப்புகள் மேலிருந்து துவங்கி கீழே ஒன்றிணைவதும் ஆகும்.

பாட்டியாலா சல்வார் தைக்க பொதுவாக சாதாரண சல்வாரைத் தைக்க ஆகும் துணியைவிட இரண்டு மடங்கு தேவைப்படும். அதாவது நான்கு மீட்டர் நீளத்துணி தேவைப்படும். பாட்டியாலா ஆடை அதன் மடிப்புவரைகளுடன் சல்வாருக்கு தனி அழகை தருகிறது. மடிப்புகள் சேரும் மேற்புரம் ஒரு கச்சை வைத்து தைக்கப்படுகிறது.

மடிப்புகளுடன் கூடிய இந்த பாட்டியாலா சல்வாரை முதலில் அணிந்தவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நகரின் ஷாஹி (அரசர்) குடும்பத்தினர் ஆவர். இதனால் முதலில் இந்த பாட்டியாலா "ஷாஹி" சல்வார் என அழைக்கப்பட்டது. இது பஞ்சாப் சூட் ஆடைக்கு பாரம்பரிய மாற்றாக உள்ளது.

பாட்டியாலாவும் மேலாடையும்[தொகு]

பாட்டியாலா சல்வாரில் பஞ்சாப்பியர்கள் மத்தியில் வேறுபட்ட சட்டைகள் (கமீஸ்) அணியப்படுகின்றன. அவை குடைடையான சட்டை, நீண்ட சட்டை போன்றவை ஆகும். மேலும் இப்போது சில பெண்கள் டி-சட்டையை பாட்டியாலாவுடன் அணிந்து ஆசிய மற்றும் மேற்கத்திய தோற்றத்தில் கலவையாக கொடுக்கின்றனர். எனினும் பயன்படுத்தப்படும் மிக பிரபலமான மற்றும் பாரம்பரிய ஆடை என்றால் மேலே அணியும் கமீஸ் குறுகியதாக இருப்பதே ஆகும்.

பிரபல கலாச்சாரத்தில்[தொகு]

பண்டி அவுர் பாப்லி (2005) திரைப்படத்தில் ஒரு புதிய தோற்றத்தில் பாட்டியாலா சல்வார் மற்றும் துர்தா ஆகியவை திரைப்பட நடிகை ராணி முகர்ஜி அணிய வடிவமைக்கப்பட்டன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "FASHION: How to Dress a Rockstar". Tehelka Magazine, Vol 8, Issue 39. Oct 1, 2011. Archived from the original on செப்டம்பர் 24, 2011. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 12, 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டியாலா_சல்வார்&oldid=3562616" இலிருந்து மீள்விக்கப்பட்டது