மால்வாய் கிளைமொழி
தோற்றம்

மால்வாய் (Malwai) பஞ்சாபின் மால்வா வட்டாரத்தில் பேசப்படும் பஞ்சாபி மொழியின் ஓர் கிளைமொழியாகும்.[1]மால்வாய் பேசப்படும் முதன்மையிடங்களாக பெரோசுப்பூர், ஃபாசில்கா, பரித்கோட், முக்த்சர்,[note 1] மோகா, பதிண்டா, பர்னாலா, மான்சா மாவட்டங்களும் லூதியானா மாவட்டத்தின் ஜாக்ரோன், இராய்கோட், லூதியானா (மேற்கு) வட்டங்களும் உள்ளன.[note 2] பாக்கித்தானில் பஞ்சாப் மாகாணத்தின் பகவல்நகர், வெகாரி மாவட்டங்களில் பேசப்படுகின்றது.
பஞ்சாபி மொழியின் கிளைமொழிகளுக்கிடையேயான வேறுபாடு பேசும் தன்மையைப் பொறுத்திருந்தாலும் சில சொற்களின் பொருளிலும் கவனிக்கப்பட்டுள்ளது:
| தமிழ் | மாஜி அல்லது சீர்தர பஞ்சாபி. | மால்வாய் |
|---|---|---|
| அவன் வருவான். | ਉਹ ਆਏਗਾ/ਉਹ ਆਵੇਗਾ। | ਉਹ ਆਊਗਾ। |
| நான் வருகிறேன். | ਮੈਂ ਆ ਰਿਹਾ ਹਾਂ/ਮੈਂ ਆਉਂਦਾ ਪਿਆ ਹਾਂ। | ਮੈਂ ਆਈ ਜਾਨਾਂ। |
| அவன் வருகிறான். | ਉਹ ਆ ਰਿਹਾ ਹੈ/ਉਹ ਆਉਂਦਾ ਪਿਆ ਹੈ। | ਉਹ ਆਈ ਜਾਂਦੈ। |
| தூக்க/எடுக்க | ਚੁੱਕਣਾ | ਚੱਕਣਾ |
| வேரறுக்க/தோண்ட | ਪੁੱਟਣਾ | ਪੱਟਣਾ |
| உங்கள் | ਤੁਹਾਡਾ | ਥੋਡਾ/ਸੋਡਾ |
| (என்/உன்/அவனது/அவளது) சொந்த | ਆਪਣਾ | ਆਵਦਾ |
| என்னால்/என்னிடமிருந்து | ਮੇਰੇ ਤੋਂ/ਮੇਰੇ ਕੋਲੋਂ | ਮੈਥੋਂ |
| உன்னால்/உன்னிடமிருந்து | ਤੁਹਾਡੇ ਤੋਂ/ਤੁਹਾਡੇ ਕੋਲੋਂ | ਥੋਤੋਂ |
| உனக்கு | ਤੁਹਾਨੂੰ | ਥੋਨੂੰ |
| ஒட்டகம் | ਊਠ | ਉੱਠ |
| மகன் | ਪੁੱਤਰ | ਪੁੱਤ |
| நண்பன் | ਮਿੱਤਰ | ਮਿੱਤ |
| சிறுநீர் | ਮੂਤਰ | ਮੂਤ |
| பனித்துளி | ਤ੍ਰੇਲ਼ | ਤੇਲ਼ |
குறிப்புகள்
[தொகு]- ↑ ஃபாசில்கா, முக்த்சர், பகவல்நகர் மாவட்டங்களின் சில தெற்கத்திய சிற்றூர்களில் பேசப்படும் மொழி இராச்சசுத்தானியின் கிளைமொழியான பாக்ரி மொழியின் தொடர்ச்சியாகும்.
- ↑ Tலூதியானா மாவட்டத்தின் கிழக்கு வட்டமான லூதியான (தெற்கு) வட்டத்திலும் பயல், கன்னா, சம்ராலா வட்டங்களிலும் பேசப்படும் கிளைமொழி புவாதி கிளைமொழியின் தொடர்ச்சியாக உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Punjabi University, Patiala". Archived from the original on 2017-07-31. Retrieved 2016-07-26.