சத்து மா (உணவு)
சத்து மா (Sattu) என்பது பருப்புகளும் சிறுகூலங்களும் கலந்த மாவு அல்லது பொடியாகும். இது இந்தியாவிலும் பாக்கித்தானிலும் முதன்மை உணவாகவோ துணை உணவாகவோ பயன்படுகிறது.
வரலாறு[தொகு]
சத்து மா பொடித்தல் மிகப் பண்டைய கால முதலே வழக்கில் இருந்து வருகிறது[1]இது இந்தியா முழுவதிலும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இது பீகாரில் தேசி அல்லது உள்நாட்டு ஆர்லிக்சு என வழங்கப்படுகிறது.
பயன்பாடு[தொகு]
பஞ்சாபில் இது பார்லி வறுத்துப் பொடித்துச் செய்யப்படுகிறது.
சத்து மாவின் கலவைகள்[தொகு]
சத்து மா உலர் பருப்புகளையும் உலர் கூலங்களையும் குறிப்பாகப் பார்லி அல்லது துவரம் பருப்பை வறுத்துப் பொடித்துச் செய்யப்படுகிறது. மரபாக இது பருப்பு வகையறாக்களை வாணலியில் இட்டு மணலுடனோ இல்லாமலோ வறுத்து செய்வர்.வறுத்ததும் இவற்றைச் சலித்துப் பின்னர் நுண்ணிய பொடியாக்குவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Alop ho riha Punjabi virsa by Harkesh Singh Kehal Pub Lokgeet Parkashan ISBN 81-7142-869-X
வெளி இணைப்புகள்[தொகு]
- Manufacturing of sattu பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
- Barley sattu பரணிடப்பட்டது 2016-08-17 at the வந்தவழி இயந்திரம்