மண்டி கோபிந்த்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டி கோபிந்த்கர்
எஃகு நகரம்
நகரம்
அடைபெயர்(கள்): மண்டி
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாபு
மாவட்டம்பதேகாட் சாகிபு
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்73,130
மொழிகள்
 • அலுவல்முறைபஞ்சாபி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
பின்147301
தொலைபேசி குறியீடு01765
வாகனப் பதிவுPB 23
மாந்தப் பாலின வீதம்878/1000 /

மண்டி கோபிந்த்கர் (Mandi Gobindgarh) இந்திய மாநிலம் பஞ்சாபில் பதேகாட் சாகிப் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமும் நகராட்சியுமாகும். இங்கு ஏராளமான எஃகு உருட்டாலைகளும் தொழிற்சாலைகளும் அமைந்துள்ளதால் இந்நகரம் சில நேரங்களில் எஃகு நகரம் எனவும் "லோகா மண்டி" ("இரும்புச் சந்தை") எனவும் அழைக்கப்படுகின்றது. வடித்தல் மற்றும் வார்ப்பகங்கள் நிறைய அமைந்துள்ள இந்த நகரம் உலகளவிலும் அறியப்படுகின்றது. பஞ்சாபின் நகராட்சிகளில் செல்வச்செழிப்பான நகராட்சியாகவும் விளங்குகின்றது.

மக்கள்தொகையியல்[தொகு]

2001ஆம் ஆண்டு இந்தியக் கணக்கெடுப்பின்படி,[1] கோபிந்த்கரின் மக்கள்தொகை 55,416 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 56% விழுக்காடாகவும் பெண்கள் 44% ஆகவும் உள்ளனர். கோபிந்த்கரின் சராசரி படிப்பறிவு வீதம் தேசிய அளவான 59.5% விடக் கூடுதலாக 69% ஆக உள்ளது : ஆண்களின் படிப்பறிவு 72%, பெண்களின் படிப்பறிவு 67%. மக்கள்தொகையில் 12% ஆறு அகவைக்கு கீழுள்ளனர்.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டி_கோபிந்த்கர்&oldid=3575694" இருந்து மீள்விக்கப்பட்டது