பஞ்சாப் நாட்டுப்புற நடனங்கள்
பஞ்சாப் நாட்டுப்புற நடனங்கள் ( Punjabi dances ) என்பவை இந்தியா, பாக்கித்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள பஞ்சாப் பிராந்தியத்தில் பஞ்சாபி மக்களால் ஆடப்படும் நாட்டார் நடனங்களாகும். இந்தப் பஞ்சாபி நடனங்கள் ஆடும் பாணி மிக ஆற்றலோடும், மெதுவாகவும், நடுத்தர வேகத்திலும் ஆடப்படுகின்றன. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆடும் முறைகளில் குறிப்பிட்ட வடிவங்கள் உள்ளன. மற்றவர்கள் மத சூழல்களில் ஆடும்போது நடனங்கள் சில மதச்சார்பற்றவையாக உள்ளன.
பஞ்சாபி நடனங்கள் பொதுவாக கொண்டாட்டங்களின்போது ஆடப்படுகின்றன. அதாவது வைசாகி, திருமணம், லோரி, ஜாசான்-இ-பாரான் (வசந்த விழா) போன்ற திருவிழாக்களின்போது ஆடி, எல்லோரையும் ஆட ஊக்குவிக்கிறது. திருமணமான பஞ்சாபி இணையர் பொதுவாகச் சேர்ந்து நடனமாடுவர். கணவர் ஆடும் பஞ்சாபி நடன வடிவம் ஆண் பஞ்சாபி நடன பாணியில் அடிக்கடி கைகளை உயர்த்தி ஆடுவர், மனைவி பெண் பஞ்சாபி நடனங்கள் பாணியில் ஆடுவார்.
முதன்மையாக ஆண்களுக்கான அல்லது அனைவருக்குமான பஞ்சாபி நாட்டுப்பற நடனம் பங்காரா அல்லது பாங்ரா ஆகும். பெண்களுக்கான நடனம் ஜிட்டா அல்லது ஜிட்டாஹா எனப்படுகிறது.
- பொதுவான பஞ்சாபிய பெண்களின் நாட்டுப்புற நடனங்கள்
- சாம்மி (நடனம்)
- கித்தா நடனம்
- ஜாகோ
- கிக்ளி
- லுட்டி
- ஆண்களுக்கான பொதுவான பஞ்சாபி நடனங்கள்
- பாங்கரா
- மல்வாய் ஜிட்டா
- ஜுமார்
- லுட்டி
- ஜல்லி
- மிர்சா
- சியால் கோடி
- ஜுக்னி
- கிச்சான
- தமால்
- டாங்கரா
- கட்கா (Sword Dance)
- ஆண்கள், பெண்களுக்கு பொதுவான பஞ்சாபி நடனங்கள்
- பாங்கரா
- கார்த்தி
- ஜிண்டுவா
- டாண்டாஸ்
வெளி இணைப்புகள்
[தொகு]- Glossary of different Punjabi Folk Dances பரணிடப்பட்டது 2016-07-30 at the வந்தவழி இயந்திரம்
- Folk dances of Punjab
- Activities in Lahore and Folk Dances
- Folk Dances in Punjab பரணிடப்பட்டது 2013-01-23 at the வந்தவழி இயந்திரம்
- Gatka பரணிடப்பட்டது 2013-04-01 at the வந்தவழி இயந்திரம்