கைத்தல்
கைத்தல் कैथल கபிஸ்தலம் | |
---|---|
![]() பெகோவா சவுக், கைத்தல் | |
நாடு | ![]() |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | கைத்தல் |
பெயர்ச்சூட்டு | அனுமன் |
அரசு | |
• நாடாளுமன்ற உறுப்பினர் | ராஜ்குமார் சைய்னி |
• சட்டப் பேரவை உறுப்பினர் | ரந்தீப் சிங் சூரஜ்வாலா |
ஏற்றம் | 250 m (820 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 144,915 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
பின் | 136027 |
தொலைபேசி குறியீடு | 01746 |
வாகனப் பதிவு | HR-08,HR-64(வணிக வண்டிகளுக்கு) |
மாந்தப் பாலின விகிதம் | 880 ♂/♀ |
மக்களவை (இந்தியா) தொகுதி | குருட்சேத்திரா |
இணையதளம் | kaithal |
கைத்தல் (Kaithal, இந்தி: कैथल) இந்திய மாநிலம் அரியானாவில் கைத்தல் மாவட்டத்தில் உள்ள நகரமும் நகரமன்றமும் ஆகும். கைத்தல் முன்னதாக கர்னால் மாவட்டதின் அங்கமாகவும் பின்னர் குருட்சேத்திரா மாவட்டத்திலும் இருந்தது. நவம்பர் 1, 1989இல் இது கைத்தல் மாவட்டத்தின் தலைநகரமாயிற்று. பஞ்சாபின் பட்டியாலா, குருச்சேத்திரம், ஜிந்து மற்றும் கர்னாலுடன் பொது எல்லையைக் கொண்டுள்ளது. கைத்தல் மாவட்டம் அரியானாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடமேற்கு எல்லை குக்லா-சீக்கா பஞ்சாப் மாநிலத்துடன் இணைந்துள்ளது.
புவியியல்[தொகு]
கைத்தல் 29°48′N 76°23′E / 29.8°N 76.38°E ஆள்கூறுகளில் அமைந்துள்ளது.[2] இதன் சராசரி உயரம் 220 மீட்டர்கள் (721 அடி) ஆகும்.
தொன்மவியல்/வரலாற்றுக்கு முந்தையக் காலம்[தொகு]

பல்லாண்டுகளாக, இது கபிஸ்தலம் என அறியப்பட்டு வந்துள்ளது. இதன் பொருள் "கபியின் இடம்" என்பதாகும்; கபி என்பது அனுமனின் மற்றொரு பெயராகும். இதனை மகாபாரதத்தின் பாண்டவப் பேரரசர், தருமன் நிறுவியதாக கருதப்படுகின்றது. அனுமனுடன் தொடர்புடையதாக கருதப்படும் இங்கு அனுமனின் தாய் அஞ்சனைக்கு கோயில் உள்ளது. எனவே இதுவே அனுமனின் பிறப்பிடம் என உள்ளூர்வாசிகளால் நம்பப்படுகின்றது.
வாமன புராணத்தில் இங்குள்ள விருத்தகேதார கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3] குருச்சேத்திராவைச் சுற்றியுள்ள 48 கோயில்களுக்கு சமயப் பயணம் மேற்கொள்கையில் பல கோயில்கள் உள்ள கைத்தல் முதன்மையான ஒன்றாகும்.
மக்கள்தொகையியல்[தொகு]
2011ஆம் ஆண்டு இந்திய கணக்கெடுப்பின்படி, கைத்தலின் மொத்த மக்கள்தொகை 9,45,631.[1] பாலின விகிதம் 887 (F/M). ஆறு அகவைக்கு குறைவானோர் மக்கள்தொகையில் 11.5% ஆகும். படிப்பறிவு 80.76%; ஆண்கள் படிப்பறிவு 87.65%, பெண்கள் படிப்பறிவு 73.07%. பஞ்சாபியும் இந்தியும் முதன்மை மொழிகளாகும். கைத்தல் மாவட்டத்தில் 277 சிற்றூர்களும் 253 பஞ்சாயத்துக்களும் உள்ளன.
மேற்சான்றுகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
"Kaithal". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 15. (1911). Cambridge University Press.
- "Razia Sultan Tomb" இம் மூலத்தில் இருந்து 2007-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071215014638/http://www.thedelhicity.com/DelhiGuide/Dgu_mem/raziaya_sultans_tomb.htm.
- "History of Kaithal" இம் மூலத்தில் இருந்து 2015-04-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150416175757/http://kaithal.nic.in/history.htm.
- "Kaithal district, official website". http://kaithal.nic.in.