பரித்கோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரித்கோட்
Faridkot
நகரம்
Photo of main building of Government Brijindra College, Faridkot
பரித்கோட் அரசு பிரியிந்திரா கல்லுரி

பரித்கோட் (Faridkot) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஓர் அரசு மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நகராட்சி ஆகும். இந்நகரம் பரித்கோட் மாவட்டத்தின் தலைநகரமுமாகும். பட்டிண்டா மற்றும் மான்சா மாவட்டங்களை உள்ளடக்கிய பரித்கோட்டை தலைநகரமாக கொண்டு பரித்கோட் கோட்டம் நிறுவப்பட்டது.இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1,475.70 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டத்தில் 8 தாலுகாகளும் 9 உப தாலுகாகளும் உள்ளன.

பெயர்க்காரணம்[தொகு]

13 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற சூஃபி துறவியான பாபா பரித்தின் நினைவாக இந்த நகரம் பரித்கோட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவருடைய சன்னதி பாக்கித்தானின் பாக்பட்டானில் அமைந்துள்ளது. பரித்கோட் நகரம் இந்த நூற்றாண்டில் மொகல்கார் என்ற பெயரில் ராசத்தானின் மன்னர் மொகல்சியால் நிறுவப்பட்டது. இவர் ராசத்தானின் அனுமன்கார் நகரின் தலைவரான ராச் முஞ்சின் பெயரன் ஆவார். பாபா பரித் மொகல்கார் நகரத்திற்கு பார்வையிட வந்ததற்குப் பின்னர் அந்த நகரின் பெயரை பரித்கோட் என்று பெயர் மாற்றினார் என்பதாக ஒரு பிரபலமான நாட்டுப்புறக் கதை கூறுகிறது. . மொகல்சியின் மகன் செயிர்சி மற்றும் வையிர்சு ஆட்சிக்காலத்திலிருந்து இந்நகரம் தலைநகராக இருந்து வருகிறது.

வரலாறு[தொகு]

சுதந்திரத்திற்கு முன்னர், மாவட்டத்தின் பெரும்பகுதி பரித்கோட் மகாராசாவின் ஆட்சியில் இருந்தது, பின்னர் அது 1948 ஆம் ஆண்டில் பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநில ஒன்றியத்தின் ஒரு பகுதியாக மாறியது.. முந்தைய பட்டிண்டா மாவட்டம் மற்றும் பெரோசுபூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து 1972 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 7 ஆம் தேதி பரித்கோட் ஒரு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. மேலும், 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பரித்கோட் மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. முக்சார் மற்றும் மோகா என்ற இரண்டு துணை நகரங்களும் தனி மாவட்டம் என்ற தகுதியை பெற்றன. முக்சாரின் முதல்வர் அர்சரன்சிங் பிரார் தலைமையில் இந்த மாவட்டங்கள் பிரிப்பு நிகழ்வு நடைபெற்றது.

.== அரசு அமைப்பு ==

பரித்கோட் நகராட்சி மன்றம் 1948 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது, தற்போது இந்நகராட்சி முதல் நிலை தரத்துடன் செயல்படுகிறது. நகராட்சியின் தற்போதைய தலைவராக உமா குரோவர் பதவியில் இருக்கிறார். இந்திய தேசிய காங்கிரசின் குசால்தீப் சிங் தில்லான் 2017ஆம் ஆண்டு இந்நகரத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்து வருகிறார்.

புவியியல்[தொகு]

பரித்கோட் நகரம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 196 மீட்டர் (643 அடி) உயரத்தில் பஞ்சாப் சமவெளியில் அமைந்துள்ளது, பஞ்சாப் சமவெளி பெரும் நிலப்பரப்பாக இருந்த மகா சட்லச்சு கங்கை சமவெளியின் ஒரு பகுதியாகும். இது ஒரு தாழ்வான தட்டைப்பகுதியாகும். மாவட்டத்தின் மேற்பரப்பு ஒரு படிநிலை சமவெளி ஆகும், இது இந்த சமவெளிகளில் பாயும் ஆறுகளை மட்டுப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. சிர்கிந்து பீடர் மற்றும் இந்திரா காந்தி கால்வாய் முதலியன இம்மாவட்டம் வழியாக செல்கின்றன. மாவட்டத்தின் நிலப்பரப்பு ஒரு சமவெளியாகும் அதன் பரப்பளவில் 1.4% மட்டுமே காடுகள் காணப்படுகின்றன.

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 6,18,008 ஆகும்.[1] இது பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கட்தொகையில் 2% ஆகும். இம்மக்கட்தொகையில் ஆண்கள் 3,27,121 பேரும் பெண்கள் 2,90,887 பேரும் அடங்குவர். இம்மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 242 நபர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் கல்வியறிவு சதவீதம் 70.6% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு சதவீதம் 75.9%, பெண்களின் கல்வியறிவு சதவீதம் 64.8% ஆகும்.

தட்பவெப்பநிலை[தொகு]

பரித்கோட் மாவட்டத்தின் காலநிலை பெரும்பாலும் வறண்ட காலநிலையாகும். மிகவும் வெப்பமான கோடையும் குறுகிய மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவை இக்காலநிலையின் அம்சங்களாகும். நவம்பர் முதல் மார்ச்சு மாதம் வரை குளிர் காலமும். அதைத் தொடர்ந்து கோடை காலம் சூன் இறுதி வரையிலும் நீடிக்கும்.. சூலை முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரையிலான காலம் தென்மேற்கு பருவமழை காலமாகும். . செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தின் பிற்பகுதி பருவமழைக்கு பிந்தைய அல்லது பருவநிலை மாற்ற காலமாகும். மார்ச் இறுதி முதல் சூன் வரை இங்கு வெப்பநிலை விரைவாக அதிகரிக்கிறது, இம்மாதங்கள் தான் இங்கு அதிக வெப்பமான மாதங்களாகும். சராசரி தினசரி அதிகபட்ச வெப்பநிலை 41 ° செல்சியசு என்றும் சராசரி தினசரி குறைந்தபட்சம் 26.5 ° செல்சியசு என்றும் பதிவாகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை தீவிரமாக உயர்ந்து . அதிகபட்ச வெப்பநிலையாக 47 பாகை செல்சியசுக்கு அப்பாலும் செல்லலாம்.. சூன் மாத இறுதியில் அல்லது சூலை தொடக்கத்தில் பருவமழை தொடங்கியவுடன், பகல் வெப்பநிலையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுகிறது. அக்டோபருக்குப் பிறகு, பகல் மற்றும் இரவு வெப்பநிலை சனவரி வரை வேகமாக குறைகிறது, இது மிகவும் குளிரான மாதமாகும். சனவரி மாதத்தில் சராசரி தினசரி அதிகபட்ச வெப்பநிலை சுமார் 20 செல்சியசு ஆகும். மற்றும் சராசரி தினசரி குறைந்தபட்சம் 4.5 ° செல்சியாக இருக்கிறது.

மாவட்டத்தில் சராசரி ஆண்டு மழை 433 மி.மீ;ஆகும். ஆண்டு மழையில் 71 சதவீதம் சூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலங்களில் பெறப்படுகிறது. மழைக்காலத்திற்கு முந்தைய மாதங்களில் சிறிதளவு மழை பெரும்பாலும் இடியுடன் கூடிய மழையாக பொழியும்.. மழைக்காலங்களில் வானிலை மிதமானதாக இருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் வானம் பெரும்பாலும் தெளிவாக இருக்கும். காற்றின் வேகம் பொதுவாக மெதுவாகவும், வடக்கிலிருந்து வடமேற்கிலும், சில முறை தென்கிழக்கு திசையிலும், ஆண்டு முழுவதும் வீசுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரித்கோட்&oldid=3589575" இருந்து மீள்விக்கப்பட்டது