பஞ்சாபில் இந்துமத விழாக்கள்
Appearance
பஞ்சாபில் இந்துமத விழாக்கள் (Hindu Punjabi festivals) என்ற இப்பட்டியலில் பஞ்சாபில் கொண்டாடப்படும் இந்து மதம் சார்ந்த திருவிழாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மகி மற்றும் வைசாக்கி திருவிழாக்கள், பஞ்சாபி நாட்காட்டியில் சூரிய மாதங்களை அடிப்படையாக கொண்டு உறுதி செய்யப்படுகின்றன. எஞ்சிய திருவிழாக்கள் யாவும் பஞ்சாபி நாட்காட்டியின் சந்திர மாதங்களை அடிப்படையாகக் கொண்டு உறுதி செய்யப்படுகின்றன.
திருவிழா நடைமுறைகள்
[தொகு]பஞ்சாபில் வாழும் இந்துக்கள் பஞ்சாபி நாட்காட்டியின் குறிப்புகள் அடிப்படையில் அவர்களுக்கான திருவிழாக்களை இறுதி செய்தும் கொண்டாடியும் வருகின்றனர்.
முக்கிய பஞ்சாபி இந்து பண்டிகைகள்
[தொகு]பண்டிகையின் பெயர் | கொண்டாடப்படும் நாள் ( ஒவ்வோர் ஆண்டும் நாட்கள் வேறுபடலாம்) |
குறிப்புகள் |
---|---|---|
மகி பண்டிகை | சனவரி 14 | இப்பண்டிகை உத்ராயனை நினைவுபடுத்தும் நாளாகும். மகர சங்கராந்திக்கு பஞ்சாபி பெயர். .[1] |
ஓலி | மார்ச்சு/பால்கன் பூர்ணிமா | இளவேனிற்கால வண்ணங்களின் திருவிழா.[2][3] |
இராம நவமி | சைத்ரா | இராமர் பிறந்த நாள் விழா.[3][4] |
அனுமன் செயந்தி | மார்ச்சு/சைத்ரா பூர்ணிமா | அனுமன் பிறந்த நாள் விழா.[3] |
மகா சிவராத்திரி | மாறுபடும் | சிவபெருமானை கொண்டாடும் விழா.[5][6] |
வைசாக்கி | ஏப்ரல் 13/வைசாக்கி | பஞ்சாபி புத்தாண்டு.மேச சங்கராந்தியில் வருகிறது. |
கிருட்டிண செயந்தி | சரவணா, கிருட்டிண பட்சம், அசுதமி | கிருட்டிணன் பிறந்த நாள் விழா.[3][4] |
ரக்சா பந்தன் | சாவன் மாத பௌர்ணமி | சகோதர சகோதரிகள் நாள் [3][7] |
சாஞ்கி | மாறுபடும் | பெண் தெய்வத்திற்கு மரியாதை செய்தல் [8] |
நவராத்திரி | சந்திரமாதம் அசுவினின் பத்தாம் நாள் | துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் நாள்.[3][9] |
சிராத்கா | பத்ராபடா மாதத்தின் இரண்டாவது பாதி | மூதாதையர்களை நினைவு கூறும் நாள். |
விசயதசமி | சந்திரமாதம் அசுவினின் பத்தாம் நாள் | இராவணன் இராமரால் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடும் நாள் [3][10] |
தீபாவளி | கார்த்திக் மாத அமாவாசை நாள் | இராமர் மற்றும் சீதை அயோத்திக்கு திரும்பியதை கொண்டாடும் நாள்.[3][10] |
விசுவகர்மா பூசை | கார்த்திக் அமாவாசைக்கு அடுத்த நாள் | கட்டடக் கலையின் கடவுளுக்கு மரியாதை செலுத்துதல் [11] |
பௌ-பீச் பஞ்சாப்பில் பாய் டூச் என்றும் அறியப்படுகிறது | மாறுபடும் | சகோதர சகோதரிகள் நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் கழித்து கொண்டாடுவர்.[10] |
கர்வா சௌத் | கார்த்திக் மாத பௌர்ணமிக்கு அடுத்த நான்காவது நாள் | பெண்கள் தங்கள் கணவனுக்காக விரதமிருந்து சந்திரனை வழிபடுவர்.[3][12] |
கார்த்திக் பூர்ணிமா | கார்த்திக் | லவா குசா பிறந்த இடமாகக் கருதப்படும் அம்ரித்சரில் உள்ள ராம தீர்த்த மந்திரில் விழா கொண்டாட்டம்[13] |
பிற பண்டிகைகள்
[தொகு]மேற்கண்ட பண்டிகைகளுடன் பஞ்சாபி இந்துக்கள் வசந்தப் பட்டத் திருவிழா, தீச் மற்றும் குக்கா போன்ற பஞ்சாபி பண்டிகைகளும் கொண்டாடுகின்றனர்.
காட்சிமேடை
[தொகு]-
Statue of Lord Shiva / நாகேசுவரர் கோயிலில் மகாதேவ்
-
துர்கா பூசை
-
குழந்தை கிருஷ்ணன்
-
சஞ்சி மாதா Ji
-
இராவணன் திறல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ drikpanchang
- ↑ "Hindustan Times 18 03 2014". Archived from the original on 2014-12-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 Punjabiyat: The Cultural Heritage and Ethos of the People of Punjab by Jasbir SIngh Khurana Hemkunt Publishers (P) Ltd பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7010-395-0
- ↑ 4.0 4.1 http://www.indtravel.com/punjab/festival.html
- ↑ Office Holidays
- ↑ The Times of India 20 02 2012
- ↑ "Hindustan Times 10 08 2014". Archived from the original on 2014-12-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
- ↑ Alop ho riha Punjabi virsa by Harkesh Singh Kehal Pub Lokgeet Parkashan பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7142-869-X
- ↑ Durga Puja
- ↑ 10.0 10.1 10.2 http://www.bharatonline.com/punjab/festivals/index.html
- ↑ http://punjab.gov.in/en_GB/list-of-holidays
- ↑ Madhusree Dutta, Neera Adarkar, Majlis Organization (Bombay), The nation, the state, and Indian identity, Popular Prakashan, 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85604-09-1,
... originally was practised by women in Punjab and parts of UP, is gaining tremendous popularity ...
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ The Tribune 14 11 2008
படக்காட்சியகம்
[தொகு]-
நாகேசுவர் ஆலயத்தில் சிவபெருமான்/ மகாதேவர் சிலை
-
துர்கா பூசை
-
கிருட்டிண பாலகன்
-
சாஞ்கி மாதா
-
இராவணன் கொடும்பாவி
புற இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் பஞ்சாபில் இந்துமத விழாக்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.