இந்திய பஞ்சாபில் விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாபின் சின்னம்
சண்டிகர் வளைதடிப்பந்தாட்ட அரங்கம்
ஒளியூட்டப்பட்ட மொகாலி துடுப்பாட்ட அரங்கம்
பஞ்சாப் துடுப்பாட்ட சங்க விளையாட்டரங்கம், மொகாலி 1
காந்தி விளையாட்டரங்கம்
சகாரி ஆடும் இளைஞர்

இந்திய பஞ்சாபில் விளையாட்டுக்களில் தற்கால வளைதடிப் பந்தாட்டம், துடுப்பாட்டம் போன்றவற்றுடன் மரபுசார் விளையாட்டுக்களான கபட்டி (சடுகுடு), குசுத்தி (மற்போர்) குடோ கூண்டி (வளைதடிப் பந்தாட்டத்தைப் போன்றது) ஆகியனவும் அடங்கும். பஞ்சாப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரபார்ந்த விளையாட்டுக்கள் ஆடப்படுகின்றன.[1]

பஞ்சாபில் மரபார்ந்த விளையாட்டுக்களை வளர்க்கவும் பாதுகாக்கவும் மாநில அரசு 2014 முதல் பல முனைவுகளை எடுத்து வருகின்றது; பஞ்சாப் ஊரக விளையாட்டுப் போட்டிகள் இவற்றில் ஒன்றாகும். இந்தப் போட்டிகளில் மாநில விளையாட்டுக்களான குஸ்தி போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.[2]

துடுப்பாட்டம்[தொகு]

பஞ்சாபிகளுக்கு மிக விருப்பமான விளையாட்டாக துடுப்பாட்டம் உள்ளது. மாநில அளவில் இதனை பஞ்சாப் துடுப்பாட்ட சங்கம் கட்டுப்படுத்துகின்றது.[3] இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் கிங்சு இலெவன் பஞ்சாபு மொகாலியைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது.

கட்கா[தொகு]

கட்கா (பஞ்சாபி: ਗਤਕਾ) வாட்களுக்கு மாறாக மரத்தடிகளைக் கொண்டு போரிடும் தெற்காசிய மரபார்ந்த விளையாட்டாகும்.

சடுகுடு[தொகு]

சடுகுடு சுட்டுப்படம்
வடலா சாந்துவானில் கபடி
வட்டமான கபடி மைதானம்

பஞ்சாப் வட்டப்பாணி[தொகு]

இது பஞ்சாபின் மாநில விளையாட்டாகும்.

கபடி உலகக் கோப்பை[தொகு]

பஞ்சாப் வட்டப்பாணியிலமைந்த கபடி உலகக்கோப்பை போட்டிகளை 2010இலிருந்து பஞ்சாப் ஒருங்கிணைத்து வருகின்றது. 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆடவர் இறுதியாட்டத்தில் இந்தியாவும் பாக்கித்தானும் பங்கேற்றன; இதில் 45-42 என்ற புள்ளிகளில் இந்தியா வென்றது.[4] பெண்கள் இறுதியாட்டம் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே நடந்தது; இதிலும் இந்தியா 36-27 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

இந்தக் கோப்பையின் நிறைவு விழா பாதலில் உள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டரங்கில் நடந்தது. இதில் பல முன்னணி திரை நட்சத்திரங்களும் புகழாளர்களும் பங்கேற்றனர். [5]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]