குர்முகி
குர்முகி | ||
---|---|---|
வகை | அபுகிடா | |
மொழிகள் | பஞ்சாபி வரலாற்றுப்படி: தோக்ரி, பாரசீகம், இந்துசுத்தானி, சிந்தி,[1] சமசுகிருதம் | |
காலக்கட்டம் | c. 1539–நடப்பில் | |
மூல முறைகள் | பிராமி → குப்தா எழுத்துமுறை → சாரதா எழுத்து முறை → லன்டா எழுத்துமுறை → குர்முகி | |
நெருக்கமான முறைகள் | தேவநாகரி, கோஜ்கி, டாக்ரி | |
ஒருங்குறி அட்டவணை | U+0A00–U+0A7F | |
ஐஎஸ்ஓ 15924 | Guru | |
குறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம் |
பிராமி |
---|
பிராமி எழுத்துமுறையும் அதன் வழித்தோன்றல்களும் |
வடபிராமி
|
தென் பிராமி |
குர்முகி (Gurmukhi, பஞ்சாபி: ਗੁਰਮੁਖੀ, IPA: [ɡʊɾmʊkʰi]) பஞ்சாபி மொழியை எழுதுவதற்கு சீக்கியர்களும் இந்துக்களும் பெரிதும் பயன்படுத்தப்படும் எழுத்துமுறையாகும். இது இலன்டா எழுத்துமுறையிலிருந்து உருவான அகரவரிசையிலான அபுகிடா ஆகும்; 16ஆவது நூற்றாண்டில் சீக்கியர்களின் இரண்டாம் குருவான குரு அங்கத் இதனை சீர்தரப்படுத்தினார். குர்முகி என்பதற்கு பொதுவாக குருவின் வாயிலிருந்து எனப் பொருள்பட்டாலும் பஞ்சாபி மொழியிலாளர்கள் துவக்க காலங்களில் குருவின் எதிராக அமர்ந்து அவரைப் பின்பற்றிய குர்முக்குகள் பயன்படுத்திய எழுத்துக்கள் என்பதால் இப்பெயர் எழுந்ததாகக் கருதுகின்றனர். குரு கிரந்த் சாகிப் முழுமையும் இந்த எழுத்துமுறையிலேயே எழுதப்பட்டுள்ளது.
பொருளடக்கம்
எழுத்துக்கள்[தொகு]
குர்முகி நெடுங்கணக்கில் 35 எழுத்துக்கள் உள்ளன.
பெயர் | உச்சரிப்பு. | பெயர் | உச்சரிப்பு. | பெயர் | உச்சரிப்பு. | பெயர் | உச்சரிப்பு. | பெயர் | உச்சரிப்பு. | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ੳ | uṛa | - | ਅ | æṛa | ə by itself | ੲ | iṛi | - | ਸ | səsa | sa | ਹ | haha | ha |
ਕ | kəka | ka | ਖ | khəkha | kha | ਗ | gəga | ga | ਘ | kəga | kà | ਙ | ngənga | nga* |
ਚ | chəcha | cha | ਛ | shəsha | sha | ਜ | jəja | ja | ਝ | chəja | chà | ਞ | neiia | ña#* |
ਟ | ṭenka | ṭa | ਠ | ṭhəṭha | ṭha | ਡ | ḍəḍa | ḍa | ਢ | ṭəḍa | ṭà | ਣ | ṇaṇa | ṇa |
ਤ | təta | ta | ਥ | thətha | tha | ਦ | dəda | da | ਧ | təda | tà | ਨ | nəna | na |
ਪ | pəpa | pa | ਫ | phəpha | pha | ਬ | bəba | ba | ਭ | pəba | pà | ਮ | məma | ma |
ਯ | yaiya | ya | ਰ | rara | ra | ਲ | ləla | la | ਵ | vava | va/wa | ੜ | ṛaṛa | ṛa |
பயன்பாடு[தொகு]
குர்முகி முதன்மையாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது; அனைத்து அலுவல் மற்றும் நீதித்துறை செயற்பாடுகளுக்கும் குர்முகி மட்டுமே எழுத்துமுறையாக உள்ளது. தவிர பஞ்சாபி மொழி அலுவல்மொழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரியானா, இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களிலும் சம்மு பகுதியிலும் தேசியத் தலைநகரமான தில்லியிலும் பயன்படுத்தப்படுகின்றது. பிராஜ் பாஷா, கரிபோலி, சில இந்துசுத்தானி வழக்கு மொழிகள், சமசுகிருதம், சிந்தி மொழிகளும் குர்முகி தழுவிய எழுத்துமுறையில் எழுதப்படுகின்றன.[2]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "Script". Sindhilanguage.com.
- ↑ sindhilanguage.com
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் குர்முகி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Science of Gurmukhi Alphabet
- Let's Learn Punjabi Animation Punjabi Film on YouTube
- Punjabi Wikipedia in Gurumukhi Script
- Free Online Gurmukhi Typewriter
- Utility to write in Gurmukhi using Transliteration
- Punjabi Computing Resource Centre
- Saab – A free Unicode 4.0 OpenType Gurmukhi font
- Gurmukhi pseudo text generator
- Free online Punjabi (Gurmukhi) lessons
- Gurmukhi in Guru Granth Sahib
- Learn Gurmukhi
- Omniglot's guide to Gurmukhi
- Test for Unicode support in Web browsers
- Unicode script chart for Gurmukhi (PDF file)
- The Advanced Centre for Technical Development of Punjabi language, Literature and Culture, Punjabi University, Patiala
- E-Book on Gurmukhi and Shahmukhi
- Learn Gurmukhi, Muharni, and how to count in Gurmukhi/Punjabi