உள்ளடக்கத்துக்குச் செல்

துளு எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துளு எழுத்துமுறை துளு மொழியை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்துமுறை ஆகும். இதை திகலரி எழுத்துமுறை என்றும் அழைப்பர். துளு எழுத்துமுறை மலையாள எழுத்துமுறையுடன் மிகுந்த ஒற்றுமை உடையது. துளு பிராமனர்கள் வேத மந்திரங்களை துளு எழுத்துமுறை கொண்டே எழுதினர்.

துளு நூல்கள்

[தொகு]

துளு எழுத்துமுறையில் அதிக அளவில் நூல்கள் இல்லை. 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட துளு மகாபாரதம் என்ற நூல்தான் துளு எழுத்துமுறையில் எழுதப்பட்ட மிகப்பழைய நூலாகும். துளு எழுத்துமுறை எழுதப்பட்ட 15ஆம் நூற்றாண்டின் துளு தேவிமஹாத்மே, மற்றும் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியங்களான ஸ்ரீ பாகவதா மற்றும் காவேரி ஆகிய நூல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வீழ்ச்சி

[தொகு]

துளு எழுத்துமுறையின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. மொழியியற் பார்வையில் துளு ஒரு சிறுபாண்மை மொழியாக இருந்ததால் போதிய ஆதரவோ அல்லது கவனமோ பெறவில்லை. ஜெர்மானிய மிஷினரிகள் துளு நூல்கள் அச்சிடும் போது, துளு எழுத்துமுறையை பயன்படுத்துவதற்கு பதிலாக கன்னட எழுத்துமுறையை பயன்படுத்தியதும் இவ்வெழுத்துமுறையின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

மேலும் காண்க

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=துளு_எழுத்துமுறை&oldid=3289220" இலிருந்து மீள்விக்கப்பட்டது