ரஞ்சனா எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஞ்சனா
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
c. 1100–தற்காலம்
திசைleft-to-right Edit on Wikidata
பிராந்தியம்நேபாளம் மற்றும் இந்தியா
மொழிகள்நேபால் பாசா
சமஸ்கிருதம்
திபெத்திய மொழி
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
பிராமி
தோற்றுவித்த முறைகள்
சொயொம்போ எழுத்துமுறை
நெருக்கமான முறைகள்
மோடி எழுத்துமுறை
குஜராத்தி எழுத்துமுறை
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.

ரஞ்சனா எழுத்துமுறை என்பது பிராமியில் இருந்து தோன்றிய ஒரு அபுகிடா எழுத்துமுறையாகும். இந்த எழுத்துமுறை நேபால் பாசா மொழியினை எழுத முதன்மையாக பயன்படுகிறது. மேலும் இது இந்தியா, திபெத், மங்கோலியா போன்ற பகுதிகளின் பௌத்த மந்திரங்களை எழுத பயன்படுகிறது.

பயன்பாடு[தொகு]

ரஞ்சனா எழுத்துமுறை ஒரு பிராமிய எழுத்துமுறையாகும். இது தேவநாகரி எழுத்துமுறையோடு பல ஒற்றுமைகளைக்கொண்டது. இந்த எழுத்துமுறை மகாயான மற்றும் வஜ்ரயான பௌத்த மடங்களில் ஓம் மணி பத்மே ஹூம் போன்ற மந்திரங்களையும் பௌத்த சூத்திரங்களை எழுத பயன்படுத்தப்படுகிறது. பிரசலித் எழுத்துமுறை யுடன் இதுவும் நேபாள எழுத்துமுறைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

பிக்‌ஷு ஆனந்தர் கி.பி 1215 ஆம் ஆண்டில் ஆரிய அஷ்டசஹஸ்ரிக பிரக்ஞாபாரமித சூத்திரத்தை ரஞ்சனா எழுத்துமுறையிலேயே எழுதினார்

சமீபத்திய முன்னேற்றம்[தொகு]

இருபாதாம் நூற்றாண்டின் மத்தியில் கிட்டத்தட்ட பயன்படாத நிலைக்கு சென்ற இவ்வெழுத்துமுறை தற்காலத்தில் எழுச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நேபாளத்தில் உள்ள காத்மாண்டு மாநகராட்சி, லலித்பூர் துணை மாநகராட்சி, பக்தபூர் நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் இவ்வெழுத்துமுறையினை அறிவிப்பு பலகைகளிலும், பிற இடங்களிலும் பயன்படுத்தி வருகின்றன. மேலும் இந்த எழுத்துமுறையினை ஊக்கிவிக்கவும் அழிவில் இருந்து காப்பாற்றவும் பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றனர். இந்த எழுத்துமுறை நேபாள் பாசா இயக்கத்தினாரால் ஆதரவளிக்கப்பட்டு, செய்திதாள்கள் மற்றும் வலைத்தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

நேபாள-ஜெர்மானிய திட்டம் ஒன்று ரஞ்சனா கையெழுத்துபிரதிகளை பாதுகாப்பத்தில் ஈடுபாடு காட்டுகின்ற்ன[1]

ரஞ்சனா எழுத்துமுறையினை யூனிகோடில் சேர்ப்பதற்கான கோரிக்கையும் விடப்பட்டு அதற்கு வரைவறிக்கையும் தரப்பட்டுள்ளது[2]

ரஞ்சனா எழுத்துமுறையில் எண்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சனா_எழுத்துமுறை&oldid=2147185" இலிருந்து மீள்விக்கப்பட்டது