கோலெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலெழுத்து என்பது தென் இந்தியாவில் காணப்பட்ட பண்டைய எழுத்து முறையாகும். இது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பாவிக்கப்பட்டது.[1][2] இது மலையாளத்தில் மிகச் சமீப காலத்திலும், அதாவது கிட்டத்தட்ட கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. தற்போதும் இதன் குறிப்பிடத்தக்க பாவனை அங்குள்ளது.[3]

வட்டெழுத்திலிருந்து கோலெழுத்து உருவாகியது. இவற்றுக்கிடையே பாரிய வேறுபாடு இல்லை. ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் இதில் வேறுபாடுகள் காணப்பட்டன. இது வட்டெழுத்துக் குடும்ப எழுத்துமுறைக்கு உரியதாகும்.[4]

வட்டெழுத்துக்கு முன்பே சங்க காலத்தில் கோலெழுத்தும் கண்ணெழுத்தும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோலால் எழுதப்படும் எழுத்து கோலெழுத்து என விளக்கப்படுகிறது.[5] இன்னுமொரு கருத்து, "கோடு எழுத்துக்கள்" கொண்டவை கோலெழுத்து என விளக்குகிறது.[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Ancient writing schemes of Kerala". 2009-11-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-09-27 அன்று பார்க்கப்பட்டது.
  2. A. Aiyappan (1948). Report on the Socio-economic Conditions of the Aboriginal Tribes of the Province of Madras. Government Press. பக். 131. http://books.google.co.uk/books?id=bHmwAAAAIAAJ&q=kolezhuthu+tamil&dq=kolezhuthu+tamil&hl=en&sa=X&ei=NCqtUdFHqJnRBczfgeAF&ved=0CF8Q6AEwCQ. 
  3. "மொழி". 12 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Grantha, Vattezhuthu, Kolezhuthu, Malayanma, Devanagiri, Brahmi and Tamil alphabets". 12 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற் காரணம்". 12 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. K. S. Singh & S. Manoharan, People of India: National Series Volume IX: Languages and Scripts: Archaeological Survey of India, 1993, p. 27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலெழுத்து&oldid=3552296" இருந்து மீள்விக்கப்பட்டது