திருநெல்வேலித் தமிழ்
Appearance
திருநெல்வேலித் தமிழ் (Tirunelveli Tamil) அல்லது நெல்லைத் தமிழ் (Nellai Tamil), என்பது 'தென்பாண்டிச் சீமை' என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும், பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்குத் தமிழ் மொழியாகும்.[1][2][3]
தமிழ் மொழி, பொதிகை மலையில் பிறந்தது என இந்து புராணங்கள், இதிகாசங்களில் தகவல்கள் உள்ளன. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும்.[சான்று தேவை] எனவே நெல்லைத் தமிழைத் தமிழ் மொழியின் துவக்கநிலை அமைப்பைக் கொண்டுள்ள தூய தமிழ் வடிவமாக் கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக சில வார்த்தைகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
- அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
- நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
- ஏளா! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்?
- முடுக்குது - நெருக்குகிறது
- சொல்லுதான் - சொல்கிறான்
- செய்தான் - செய்கிறான்
நெல்லைத்தமிழ் சொற்கள்
[தொகு]- அண்ணாச்சி – பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
- ஆச்சி – வயதான பெண்மணி – Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘பாட்டி’யை ஆச்சி என்று அழைப்பார்கள்.
- ஏல(லே) – நண்பனை அழைப்பது
- மக்கா – நண்பா
- பைதா – சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
- கொண்டி – தாழ்ப்பாள்
- பைய – மெதுவாக
- சாரம் – லுங்கி
- கோட்டி – மனநிலை சரியில்லாதவர்
- வளவு – முடுக்கு, சந்து
- சிரை – தொந்தரவு
- சேக்காளி – நண்பன்
- தொரவா – சாவி
- மச்சி – மாடி
- கொடை – திருவிழா
- கசம் – ஆழமான பகுதி
- ஆக்கங்கெட்டது – கெட்ட நேரம், சரியில்லாத ஆள் not constructive (a bad omen)
- துஷ்டி – எழவு, சாவு, இறப்பு (funeral)
- சவுட்டு – குறைந்த
- கிடா – பெரிய ஆடு (male)
- செத்த நேரம் – கொஞ்ச நேரம்
- குறுக்க சாய்த்தல் – படுத்தல்
- பூடம் – பலி பீடம்
- அந்தானிக்கு – அப்பொழுது
- வாரியல் – துடைப்பம்
- கூவை – ஆந்தை an owl (bird of bad omen)
- இடும்பு – திமிறு (arrogance)
- சீக்கு – நோய்
- சீனி – சர்க்கரை (Sugar)
- ஒரு மரக்கா வெதப்பாடு – சுமார் 8 *செண்ட் நிலம்
- நொம்பலம் – தள்ளவும், தள்ளலாம்
- கொட்டாரம் – அரண்மனை
- திட்டு – மேடு
- சிரிப்பாணி – சிரிப்பு
- பாட்டம் – குத்தகை
- பொறத்தால – பின்னாலே
- மாப்பு – மன்னிப்பு
- ராத்தல் – ஊர் சுத்துதல்
- சோலி – வேலை
- சங்கு – கழுத்து
- செவி – காது
- மண்டை – தலை
- செவிடு – கன்னம்
- சாவி – மணியில்லாத நெல், பதர்
- மூடு – மரத்து அடி
- குறுக்கு – முதுகு
- வெக்க – சூடு, அனல் காற்று
- வேக்காடு – வியர்வை
- முடுக்குது – நெருக்குகிறது
- சொல்லுதான் – சொல்கிறான்
- செய்தான் - செய்கிறான்
- முகரை – முகம்
- இங்கன – இங்கு
- புரவாட்டி – அப்புறம்
- பிளசர் – கார்
- களவானி – திருட்டுப்பயல்
- சட்டுவம் - கரண்டி
- தொறவா - சாவி
- கோதி வை - மொண்டு வை
- அண்டிப் பருப்பு - முந்திரிப் பருப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kamatchinathan, A. (December 1969) (in en). The Tirunelveli Tamil Dialect. Linguistic Survey of Tamilnadu, Annamalai University, Department of Linguistics. https://eric.ed.gov/?id=ED044662.
- ↑ Kamatchinathan, Arunachalam (1969). The Tirunelveli Tamil dialect (in English). Annamalainagar: Annamalai University. இணையக் கணினி நூலக மைய எண் 879228930.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Kamatchinathan, p. 1