சட்டத் தமிழ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சட்டத்துறைத் தமிழ் கலைச்சொற்களை, அத் துறையில் தமிழின் பயன்பாட்டை, பயன்பாட்டு முறைமைகளை சட்டத் தமிழ் எனலாம். "நீதியை நாடிச் சொல்லும் போது, வழக்கினைப் பதிவு செய்வதும், வழக்குரைஞர்கள் வாதிடுவதும், நீதிமன்ற நடுவர் தமது தீர்ப்பை வழக்குதல் மக்கள் மொழியில் இருத்தல் வேண்டும் அதுவே மக்களாட்சி நடைபெறுவற்குச் சான்றாக அமையும்." என்ற மு. முத்துவேலுவின் கருத்துக்கு ஏற்ப ஒரு மக்கள் குழுவுக்கு அது ஒழுங்க வேண்டிய சட்டங்கள் அவர்களுக்கு புரியக்கூடிய மொழியில் இருப்பது அவசியமானது என்ற நோக்கில் சட்டத் தமிழ் முக்கியம் பெறுகிறது.
தமிழ்நாட்டில் மணவை முஸ்தபா போன்ற தமிழ் அறிஞர்கள் சட்ட நடைமுறைகளில் அனைத்து மட்டங்களிலும் சட்டத்தமிழை ஏதுவாக்க முயற்சி செய்கின்றார்கள். இலங்கையில் காவல்துறையிலும், சட்டத்துறையிலும் தமிழ்ப் பயன்பாடு தற்போது மிக அரிது.
நீதிமன்ற வாதுரைகள்
[தொகு]தமிழ் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் உயர் நீதிமன்றம்[1], மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என வகைப்பாடுகள் உள்ளன. இவற்றில், உயர் நீதிமன்றத்தில் பயன்படும் மொழி குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மற்றபடி, உயர் நீதிமன்றம் தவிர்த்த ஏனைய நீதிமன்றன்fகளில் தமிழ் மொழியே வதுரையின் போது பயன்படுகிறது.
இவற்றையும் பாக்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- சட்டத்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு - 2006-2007 - தமிழ்நாடு (தமிழில்)
- மக்கள் சட்டம் - மனித உரிமை - சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு
- அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபாவுடன் - நேர்காணல் பரணிடப்பட்டது 2007-03-15 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்)
- "தமிழ் நீதிமன்ற மொழியாக விளங்க முடியும்" பரணிடப்பட்டது 2007-10-01 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழ் பரணிடப்பட்டது 2006-10-27 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்)
- Lost in Lawyer Ruckus, Bigger Issue of Tamil in High Court
- ↑ "Madras High Court - Home Page". www.hcmadras.tn.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.