தமிழர் நாடகக் கலை
தமிழர் மரபில் தோன்றி வளர்ந்து நிலைபெற்று நிற்கும் நாடகக்கலையை தமிழர் நாடகக்கலை எனலாம். தமிழ் மரபில் கதை தழுவிவரும் ஆட்டத்தைக் கூத்து என்பர். வசனத்தில் பெரும்பாலும் அமைவதை நாடகம் என்பர். கூத்தும் நாடகமும் நெருக்கமுடைய கலைகள். இவை தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.
வரலாறு
[தொகு]முதன்மைக் கட்டுரை தமிழ் நாடக வரலாறு
இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தி தொன்று தொட்டு தமிழர் நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றி பல குறிப்புகள் உண்டு. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரத்தில் தரப்பட்டிருக்கும் நாடக அரங்கம் பற்றிய குறிப்பு பின்வருமாறு:[1] இக்குறிப்பு தமிழர் அன்றே நாடகத்தின் பல கூறுகளை கவனித்து நாடகம் போட்டதைக் குறிக்கலாம்.
“ | நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோலளவு இருப்பத்து நல்விர லாக |
” |
— அரங்கேற்றக்காதை 99-106-வது வரிகள் |
ஈழத்தமிழ் நாடகங்கள்
[தொகு]முதன்மைக் கட்டுரை: ஈழத்தமிழ் நாடகங்கள்
ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகளும் நவீன நாடகங்களாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஜீவன். (2000). தமிழ் மரபு வழி நாடக மேடை. சென்னை: நர்மதா பதிப்பகம். பக்கம் 53.