கிரேக்க நாடக வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடகம்
நாடகக் கலைகள்
தமிழர் நாடகக் கலை
ஈழத்தமிழ் நாடகங்கள்
நாடக வகைகள்
நாடகப்படம்
நாடக வரலாறுகள்
தமிழ் நாடக வரலாறு
கிரேக்க நாடக வரலாறு
ரோமானிய நாடக வரலாறு
எகிப்திய நாடக வரலாறு
மராட்டிய நாடக வரலாறு
இங்கிலாந்து நாடக வரலாறு
சோவியத் நாடக வரலாறு
சீன நாடக வரலாறு
அமெரிக்க நாடக வரலாறு
ஜெர்மன் நாடக வரலாறு
பிரெஞ்சு நாடக வரலாறு
சமஸ்கிருத நாடக வரலாறு
தொகு

கிரேக்க நாட்டில் நாடகம் கி.மு 534 ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்றது.கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டில் 'டயோனிசஸ்' என அழைக்கப்பட்ட வசந்தம் மற்றும் வளம் போன்றவற்றின் அடையாளமான கிரேக்க தெய்வத்தின் வழிபாடு நடைபெற்றது. கி.மு. ஏழாம் - எட்டாம் நூற்றாண்டு காலகட்டங்களில் அத்தெய்வத்திற்குத் திருவிழா கொண்டாடப்படும் வேளை அத்தெய்வத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக குழு நடனங்களின் போட்டி நடைபெறும். அந்நடனங்கள் நடைபெறும் சமயம் தமிழ் நாட்டில் நடைபெறும் வெறியாட்டுப் பாட்டு போன்று, பக்திப் பரவசத்தினால் பக்திப் பாடல்கள் பாடப்படும். இவ்வாடல்-பாடல்களிலிருந்தே நாடகம் பிறந்தது என கிரேக்க மேதையான அரிஸ்டாட்டில் குறிப்பிட்டுள்ளார். 'டயோனிசஸ்' தெய்வத்திற்கு ஆண்டுக்கு மூன்று திருவிழாக்கள் நடைபெறும். டிசம்பர், ஜனவரி, மார்ச், மாதங்களில் கொண்டாடப்படும் இத்திருவிழாக்களில் மார்ச் திங்கள் நடைபெறும் திருவிழா 'குழு நடனங்களின் போட்டி' என்பதற்குப் பதிலாக, துயரக் காட்சிகளின் போட்டி' என மாற்றியமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

கிரேக்கத்தின் முதல் நாடக நடிகர்[தொகு]

இக்காலத்தில் வாழ்ந்துவந்த நாடக நடிகர்களில் 'தெஸ்பிஸ்' என்பவரின் பெயர் மட்டும் சான்றாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நடிகரே முதன் முதலில் நடைபெற்ற சிறந்த துயரக் காட்சியின் போட்டியில் வெற்றிபெற்றவராவார். கிரேக்கர்கள் அறிந்த முதல் நடிகருமான இவரின் பெயராலேயே கிரேக்கக் கலைஞர்கள் இன்றளவிலும் 'தெஸ்பியன்ஸ்' என அழைக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. தெஸ்பிஸ் நடத்திய முதல் நாடகத்தில் அவரே ஒரு நடிகராகவிருந்து மாற்றி மாற்றி முகமூடியணிந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். ஒப்பனை மாற்றத்திற்கு அவர் எடுத்த நேரத்தினை பாடும் குழுவினர் நாடகத்தின் இடைவெளியினை நிரப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபலமான நாடக அமைப்பாளர்கள்[தொகு]

கி.மு. 525 முதல் 456 காலப்பகுதியில் வாழ்ந்த 'எஸ்கைலஸ்' என்பவரினால் 'தெஸ்பிஸ்' அறிமுகப்படுத்திய ஒரு கதாபாத்திரமே நடிக்கும் அவலச்சுவை நாடக வடிவத்திற்குப் பதிலாக இரு கதாபாத்திரங்கள் நடிக்கும் நாடகக் கதைகளினை எழுதினார்.இவரின் பின் கி.மு. 496 முதல் 406 காலப்பகுதியில் வாழ்ந்த 'சோபகிள்ஸ்' என்பவரால் மூன்று கதாபாத்திரங்கள் நடிக்கும் நாடகக் கதைகளினை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேக்க நாடக அரங்குகள்[தொகு]

'டயோனிசஸ்' தெய்வத் திருவிழாக் காலங்களில் அத்தெய்வத்தின் கோயில்களின் மேற்பகுதியில் கோட்டை போன்ற அமைப்பின் சரிவான பகுதிகள் நாடக அரங்குகளாகப் பயன்படுத்தப்பட்டது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் பார்வையாளர்கள் மலைச்சரிவுகளில் இருக்க அச்சரிவுகளின் அடிவாரத்தில் நாடக நடிகர்களின் அரங்கம் இருந்தது. காட்சிக்கான பின்னணி (திரைச்சீலை) அக்காலகட்டத்தில் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

காட்சி வீடு[தொகு]

கி.மு. ஜந்து - நான்காம் நூற்றாண்டு காலப்பகுதியில் நடனமாடும் இடம் என அழைக்கப்பெற்ற 'காட்சி வீடு' போன்ற அமைப்பிலான அரங்கம் பார்வையாளர்கள் அமருவதற்கு வசதியாக மலைகளில் கற்களால் கட்டப்பெற்றன. வட்ட வடிவமான தளத்தினைச் சுற்றி வளைவாகக் கட்டப்பெற்ற இவ்வரங்கத்தின் குறுக்களவு 65 அடிகளாகவும் 14,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கட்டவும் பெற்றது.இக்காட்சி வீடானது ஆரம்ப காலங்களில் நடிகர்கள் உடைகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டு பின்னர் நாடகக் காட்சிக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

'மன்னர் இடிஃபஸ்' என்ற நாடகம் அரங்கேற்றப்பட்ட வேளை இருபுறம் அமைந்த செவ்வக வடிவத்தினை உடைய கட்டிடம் பின்னணியாக அமைக்கப்பட்டது. இவ்வடிவமைப்பே பின்னாட்களில் அனைத்து நாடகங்களிலும் பயன்படுத்தப்பட்டதென்பது பல அறிஞர்கள் கருத்தாகும். ஆனாலும் சிலரது கருத்தின் படி இவ்வரங்கேற்றத் தளமானது ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாடகத்திற்கேற்றாற்போல மாற்றி அமைக்கப்பட்டதெனவும் கருத்து நிலவுகின்றது.

திறந்த வெளி நாடகங்கள்[தொகு]

பெரும்பாலான கிரேக்க நாடகங்கள் திறந்த வெளியிலேயே நடந்தவைகளாகக் கருத்து நிலவுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக நாடகங்களில் வரும் 'மரணக் காட்சிகள்' மேடைக்குப் பின்னால் நிகழ்த்தப்பட்டு, இறந்தவர்களினைப் போன்று அமைக்கப்பெற்ற கதாபாத்திர உடல்கள் இறுதியில் மேடைக்குக் கொண்டுவரப்பட்டு காண்பிக்கப்பட்டிருக்கின்றது என அமெரிக்க நாட்டு நாடக நூலாசிரியரான 'ஆஸ்கார் ஜி.பிராக்கெட்' தனது "தி எசென்ஷியல் தியேட்டர்" என்னும் நூலில் இயல் -2 இல் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரேக்க நாடகங்களின் எளிமை முறை[தொகு]

'சோபகிள்ஸ்' என்பவர் படைத்த நாடகமொன்றில் மூன்று ஆண்கள் மட்டுமே பங்குபெற்று நடித்தனர். இவர்களில் சிலர் பெண் வேடமிட்டும் நடித்தனர். எவ்வித வரையறையின்றி அவர்கள் நடித்ததன் காரணம் அந்நாடக முறையே அம்முறையானது 'அழுவது-ஓடுவது-தரையில் வீழ்வது, போன்ற எளிமையான பாணியை உடைத்தனவாய் விளங்கியதே இதற்குக் காரணம் என ஆஸ்கார் ஜி. பிராக்கெட் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

கிரேக்க நாடகத்தின் வீழ்ச்சி[தொகு]

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு காலப்பகுதியில் ரோமானியப் பேரரசன் மாவீரன் அலெக்ஸாண்டரின் படையெடுப்பிற்குப் பின்னர் கிரேக்க நாடகம் பெரு வீழ்ச்சியினை அடைந்தது. கி.மு. 200 ஆம் ஆண்டளவில் கிரேக்க நாடகம் முற்றிலுமாக மறைந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை[தொகு]

  • ஜீவன், தமிழ் மரபு வழி நாடக மேடை (ப- 13,14,15) - நவம்பர்,2000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்க_நாடக_வரலாறு&oldid=2946124" இலிருந்து மீள்விக்கப்பட்டது