பிராமணத் தமிழ்
Appearance
பிராமணத் தமிழ் (Brahmin Tamil) என்பது தமிழ் மொழியின் ஒரு வழக்கு மொழியாகும். இதைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தமிழ்ப் பிராமணர்கள் ஆவர். இத்தமிழ் வழக்கில் அதிகமாக சமஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]
எடுத்துக்காட்டுகள்
[தொகு]பிராமணத் தமிழ் பேச்சு வழக்காயினும் மிகுதியும் சிதையாது இலக்கண வளத்துடன் பேசப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- அகம் - வீடு
- அத்திம்பேர் - அத்தையின் கணவர் (அத்தை அன்பர்), அக்காவின் கணவர்
- அம்மாஞ்சி - தாய் மாமாவின் மகன் (அம்மான் சேய்)
- அம்மங்கார் / அம்மாங்காள் - தாய் மாமாவின் மகள்
- ஆம்படையான் - கணவன் (அகமுடையான்)
- ஆம்படையாள் - மனைவி (அகமுடையாள்)
- நன்னா - நன்றாக
- வாண்டு - விளையாட்டுப் பிள்ளை
- ஓய் - முன்னிலை விளி
- பிள்ளாண்டான் - மகன் (பிள்ளை ஆண்டவன்)
- பட்டவர்த்தனமா - தெளிவாக
- செத்த நேரம் - சற்று நேரம்
- நாழி ஆயிடுத்து - நாழிகை ஆகிவிட்டது
(வினை)+இண்டு - (வினை)+ கொண்டு
[தொகு]- ஈஷிண்டு - இடித்துக்கொண்டு; தேய்த்துக்கொண்டு
- பேசிண்டு - பேசிக்கொண்டு
(வினை)+ஏள் -(வினை)+ ஈர்கள்
[தொகு]- வந்தேள் - வந்தீர்கள்
- போனேள் - போனீர்கள்
(வினை)+டுத்து - (வினை)+ விட்டது
[தொகு]- வந்துடுத்து - வந்துவிட்டது
- போயிடுத்து - போய்விட்டது
(வினை)+த்து - (வினை)+ இற்று - இறந்த கால வினை முற்று
[தொகு]- தோணித்து - தோன்றிற்று
(வினை)+அறது- (வினை)+ கிறது
[தொகு]- வறது - வருகிறது
- படுத்தறது - படுத்துகிறது
- வறான் - வருகிறான்
- அவா(ள்) - அவர்கள்
- பெரியவா - பெரியவர்கள்
- வந்தா - வந்தார்கள்
- வந்தாளோல்லியோ? - வந்தார்கள் அல்லவோ?
- போறதோல்லியோ? - போகிறதோ அல்லவோ?
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pop Culture India!: Media, Arts, And Lifestyle. ABC-CLIO. 2006. p. 217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1851096361.
- ↑ Mohit K. Ray, ed. (2007). The Atlantic Companion to Literature in English. Atlantic Publishers and Distributors. p. 436. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8126908325.
- ↑ "Language variation in Tamil". Archived from the original on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.