உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) என்பது தமிழ் இலக்கியங்களை, இணையத்தில் இலவசமாக வெளியிடும், ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 ஆம் ஆண்டு, பொங்கல் தினத்தன்று, தொடங்கப்பட்ட இத்திட்டம், இன்றளவில் தொடர்ந்து இயங்கி வருகிறது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும், முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும், தமிழார்வலர்களும், ஒருங்கிணைந்து, இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். பெப்ரவரி 25, 2021 ஆம் ஆண்டில், சுமார் 777 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.[1]

இத்திட்டத்தின் தலைவராக, சுவிட்சர்லாந்தில் வசிக்கும் முனைவர் கு. கல்யாணசுந்தரம்[2] என்பவரும், துணைத்தலைவராக அமெரிக்காவிலுள்ள முனைவர் குமார் மல்லிகார்ஜுனன்[3] என்பவரும் உள்ளனர். ஒரு சமூகத்தின் மரபை பிரதிபலிப்பவை, அச்சமூகத்தின், இலக்கிய வளங்கள்தான். அதை செவ்வனே ஆவணப்படுத்தி, உலகலாவிய தமிழர்களும், பிற பயனாளிகளும், தேடித்தேடிப் பகிர்ந்துகொள்ளும் வண்ணம் கொண்டு சேர்க்கும் கூட்டு முயற்சியே மதுரைத் திட்டமாகும்.

மதுரைத் திட்டத்தின் மின்னூல்கள், ஆரம்ப காலத்தில், இணைமதி, மயிலை ஆகிய தமிழ் எழுத்துருக்களைக் (fonts) கொண்டு தொகுக்கப்பட்டன. ஆனால் 1999ஆம் ஆண்டிலிருந்து, இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர - (Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தொகுக்கப்பட்ட மின்னூல்கள் ஆவணப்படுத்தி, வெளியிடப்பட்டு வருகின்றன. மின்னூல்கள், இணையத்தில், இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் சேமிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகின்றன. 2003ஆம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode)[4] முறையில் தொகுக்கப்பட்ட மின்னூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "நூல்கள் பட்டியல்". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 27,2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மதுரைத் திட்டம்". Archived from the original on 2014-08-13. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.
  3. "Project Madurai- Management Team". பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.
  4. "Unicode". பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.

நூற் பட்டியல்

[தொகு]

பார்க்க: மதுரைத் திட்டம் நூல்கள் பட்டியல் (அகர வரிசை)

வெளி இணைப்புகள்

[தொகு]