உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் ஒலிக்குறிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் ஒலிக்குறிப்பு (Tamil Onomatopoeia) என்பது ஒலியியல் ஒத்த தன்மை அல்லது ஒத்திருக்கும் தமிழ் மொழியில் உள்ள சொற்களைக் குறிக்கிறது. தமிழ் ஒலிக்குறிப்புக்கள் தொல்காப்பியம் நூலில் காணப்படுகிறது. இது தமிழ் மொழியில் செய்யுளிலும் வழக்கிலும் பயன்படுகிறது.

வகைகள்

[தொகு]

இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர் ஆகிய இரு ஒலிக்குறிப்பு வகைள் காணப்படுகின்றன.

இரட்டைக்கிளவி

[தொகு]

இரட்டைக்கிளவியில் இரண்டு சொற்கள் சேர்ந்து, ஒரு தன்மைப் பட்டு நின்று, பிரித்தால் பொருள் தராது காணப்படும். இரண்டாம் தொல்காப்பிய நூலின் முதலாம் அதிகாரமாகிய கிளவியாக்கம் பின்வருமாறு இதனை விபரிக்கிறது:[1]

"இரட்டைக் கிளவி இரட்டின் பிரித்து இகைய."

இரட்டைக் கிளவி மூன்று வகையாகப் வகுக்கப்பட்டுள்ளது. முதலாவது, பெயரெச்ச தரமுள்ள ஒரு சொல் திரும்பவும் வரும். இரண்டாவது, சொல் பெயரளவில் அல்லது வினையாக வரும். மூன்றாவது, எதிர் எதிர் அர்த்தம் கொண்ட சொற்கள் சேர்ந்திருக்கும்.[2]

அடுக்குத் தொடர்

[தொகு]

அடுக்குத் தொடரில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து, தனித்தனி சொல்லாக, பிரித்தாலும் பொருள் தந்து காணப்படும்.[3]

இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர் ஒப்பீடு

[தொகு]
இரட்டைக்கிளவி அடுக்குத் தொடர்
இரண்டு சொற்கள் சேர்ந்து வரும்
எ.கா: துறுதுறு என்ற விழிகள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் வரும்
எ.கா: பிடி பிடி பிடி
பிரித்தால் பொருள் தராது
எ.கா: துறுதுறு
பிரித்தாலும் பொருள் தரும்
எ.கா: பிடி பிடி பிடி

உசாத்துணை

[தொகு]
  1. Hons, Pavel (2004). Reduplicative construction in Tamil (Ph.D.). Retrieved 18 May 2015.
  2. V.S., Rajaram (1992). A Reference Grammar of Classical Tamil Poetry (150 B.C.--pre-fifth/sixth Century A.D.). American Philosophical Society. p. 1089. ISBN 978-0-87169-199-6. Classical Tamil uses stems in a certain repetitive fashion
  3. பவணந்திமுனிவர் (2007). நன்னூல் - புதிய அணுகுமுறையில். சென்னை: சாரதா பதிப்பகம். pp. 301–302. அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒரு சொல் இரண்டு மூன்று நான்கு எல்லைமுறை அடுக்கும் {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_ஒலிக்குறிப்பு&oldid=3068596" இலிருந்து மீள்விக்கப்பட்டது