திருத்திய தமிழ் எழுத்துவடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருத்திய தமிழ் அசை

திருத்திய தமிழரிச்சுவடி அல்லது சீர்திருத்திய தமிழரிச்சுவடி என்பது தமிழ் அரிச்சுவடியின் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும்.

1978இல் தமிழ்நாடு அரசு தற்போதுள்ள தமிழ் அரிச்சுவடியில் சில அசைகளை அரிச்சுவடியை இலகுபடுத்தும் நோக்குடன் திருத்தியது.[1] அதன் நோக்கம் ஆ, ஓ மற்றும் ஐ அசைகளின் ஒரு அளவிற்குட்படாத அசைகளை அளவிற்குட்படுத்துவதாகும்.[2] இத்திருத்தங்கள் இந்தியாவிலும் எண்மிய உலகிலுமே பரவியது. ஏனைய பகுதிகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, ரீயுனியன் மற்றும் தமிழ் பேசும் பகுதிகள் பாரம்பரிய அசைகளையே தொடர்ந்து பாவித்தன.

மேலும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 13 இல் 11 மட்டுமே வெற்றியளித்தது. முன்மொழியப்பட்ட அய் என்பதற்குப் பதில் மற்றும் முன்மொழியப்பட்ட அவ் என்பதற்குப் பதில் ஒள ஆகியவற்றை மக்கள் தொடர்ந்து பாவித்தனர்[3]

வரலாறு[தொகு]

அரிச்சுவடி திருத்தத்தினை பிரகடனம் செய்த முதல் சுதந்திரத்திற்கு முன்னான அரசியல்வாதி பெரியார் ஆவார்.[4] 1947 இல் பெரியார் தலைமையில் அரிச்சுவடிக் குழு உருவாக்கப்பட்டு, 1951 இல் தமிழ்நாட்டு அரசால் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் அது செயற்படாமல் போய்விட்டது.[5] அவர் அதன் நெகிழ்வான கற்றல் மற்றும் எழுதுதல் போக்கின் அடிப்படையில் ஊக்கப்படுத்தினார்.[6]

குறிப்புக்கள்[தொகு]

  1. Bellary Shamanna Kesavan, Prathivadibayangaram Narasimha Venkatachari (1984). History of printing and publishing in India: a story of cultural re-awakening, Volume 1. National Book Trust. பக். 82. 
  2. Unicode. "South Asian scripts". pp. 35–36. http://www.unicode.org/versions/Unicode6.0.0/ch09.pdf. பார்த்த நாள்: 31 December 2011. 
  3. Mello, Fernando. "Evolution of Tamil typedesign". Evolution of Tamil typedesign. பார்த்த நாள் 31 December 2011.
  4. Caṇmukam, Ce. Vai. (1983). Aspects of language development in Tamil. All India Tamil Linguistics Association. பக். 96. 
  5. James, Gregory (2000). Colporuḷ: a history of Tamil dictionaries. Cre-A. 
  6. N., Jayapalan (2001). History Of India(from National Movement To Present Day). Atlantic Publishers & Dist,. பக். 169.