உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புது வளாகத்தின் முகப்பு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) தமிழ், தமிழர் தொடர்பாக நுண்ணிய திறனாய்வுகளை முதன்மையாக மேற்கொண்டுவரும் நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது 1968-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது சென்னை தரமணியில் அமைந்துள்ளது.

"உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நோக்கும் போக்கும் மற்ற தமிழாய்வு நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக இவ்வமைப்பு இயங்க வேண்டும் என்பது அடித்தளக் கோட்பாடாகும்."

வரலாறு[தொகு]

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்[தொகு]

பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2016 மார்ச் 1 இல் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது.[1] [2] இதில் தொல்காப்பியர் அரங்கு,திருவள்ளுவர் அரங்கு, கபிலர் அரங்கு,ஔவையார் அரங்கு, இளங்கோவடிகள் அரங்கு, கம்பர் அரங்கு, தமிழ்த் தாய் ஊடக அரங்கு ஆகியவற்றில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

சுவடியியல் பாதுகாப்பு மையம்[தொகு]

2014-ஆம் ஆண்டு, "தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்படும் சுவடிகள், தாள் சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் அனைத்தையும்" பாதுகாக்கும் வண்ணம் சென்னை தரமணியில் சுவடியியல் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது.[3]

இயக்குநர்கள்[தொகு]

 1. கா. மீனாட்சிசுந்தரம் (1968 - 1972)
 2. ச. வே. சுப்பிரமணியன் ( 1972 - 1985)
 3. ஏ. என். பெருமாள் (1986 - 1987)
 4. க. த. திருநாவுக்கரசு (1988 - 1989)
 5. சு. செல்லப்பன் (1989 - 1991)
 6. அன்னி மிருதுளாகுமரி தாமசு (1991 - 1994)
 7. இராமர் இளங்கோ (1994 - 2001)
 8. எசு. கிருட்டிணமூர்த்தி (2002 - 2005)
 9. ம. இராசேந்திரன் (சூன் 2006 - திசம்பர் 2007)
 10. சீன் லாரன்சு (பொறுப்பு)
 11. கரு. அழ. குணசேகரன் (2008 - 2011)
 12. கோ. விசயராகவன் (2012- 2021 )
 13. செ.சரவணன் இ.ஆ.ப (2021 - 2022)
 14. முனைவர் ந. அருள் - முழுநேரக்கூடுதல் பொறுப்பு

வெளியீடுகள்[தொகு]

 1. ஊஞ்சல் இலக்கியம்; த. அழகப்பராசு (பதி.)
 2. தமிழெழுத்தின் வரிவடிவம்; சி. கோவிந்தராசனார்; 1993

மேற்கோள்கள்[தொகு]

 1. "பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூட திறப்பு விழா". 3.5.2021 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
 2. http://pazhanthamizharvazhviyal.org/about/
 3. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய நூல்கள் கண்டுபிடிப்பு: மின் எண்மம் செய்து வெளியிட முடிவு- உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

வெளி இணைப்புகள்[தொகு]