உள்ளடக்கத்துக்குச் செல்

ச. வே. சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. வே. சுப்பிரமணியன்
பிறப்பு(1929-12-31)31 திசம்பர் 1929
வீரகேரளம்புதூர், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு12 சனவரி 2017(2017-01-12) (அகவை 87)
தேசியம்இந்தியர்
கல்விமுனைவர் (கேரளா பல்கலைக்கழகம்)
இளங்கலை(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
பணிபேராசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், தமிழறிஞர்
பெற்றோர்சு. சண்முகவேலாயுதம்,
இராமலக்குமி

ச. வே. சுப்பிரமணியன் (S. V. Subramanian, திசம்பர் 31, 1929 - சனவரி 12, 2017), தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய தமிழ் நிகண்டுகள் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

இளமைப் பருவம்

[தொகு]

இவர் திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் சு. சண்முகவேலாயுதம், இராமலக்குமி ஆகியோருக்குப் பிறந்தவர். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள புனித இருதய மேல்நிலைத் தொடக்கப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பயின்று, 1950-53 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பெற்றார்.[1]

பணி

[தொகு]

1953-56 காலப்பகுதியில் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் 1953-56 தமிழ் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கி, பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத்தலைவராகப் பணியாற்றினார்.[1]

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரிந்து அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் இதுவரை தமிழில் 54, ஆங்கிலத்தில் 5, மலையாளத்தில் ஒன்று என 60 நூல்களை எழுதியுள்ளார்.[2][3] பல கருத்தரங்குகளிலும் உரையாற்றியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.[1]

நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் 1969 இல் திருவள்ளுவர் கல்லூரியை உருவாக்கினார்.[1]

விருதுகள்

[தொகு]

இராசா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசில் உள்ளிட்ட பல பரிசில்களைப் பெற்றுள்ளார். தொல்காப்பியச் செம்மல், கம்பன் விருது, கி. ஆ. பெ. விசுவநாதம் விருது உள்ளிட்ட விருதுகளும் பெற்றுள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு "தமிழ் ஞாயிறு" என்னும் பெயரிலும், "சாதனைச்செம்மல்.ச.வே.சு" என்னும் பெயரிலும் நூலாக வெளிவந்துள்ளது.[1]

நூல்கள்

[தொகு]
  1. இலக்கிய நினைவுகள் 1964
  2. சிலம்பின் சில பரல்கள் 1972
  3. இலக்கியக் கனவுகள் 1972
  4. மாந்தர் சிறப்பு 1974
  5. ஒன்று நன்று 1976
  6. அடியார்க்கு நல்லார் உரைத்திறன் 1976
  7. இலக்கிய உணர்வுகள் 1978
  8. கம்பன் கற்பனை 1978
  9. காப்பியப் புனைதிறன் 1979
  10. கம்பனும் உலகியல் அறிவும் 1981
  11. கம்பன் இலக்கிய உத்திகள் 1982
  12. கம்பன் கவித்திறன் 2004
  13. இளங்கோவின் இலக்கிய உத்திகள் 1984
  14. இலக்கிய வகையும் வடிவும் 1984
  15. தமிழ் இலக்கிய வரலாறு 1999
  16. சிலப்பதிகாரம் மூலம் 2001
  17. சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள் 2001
  18. சிலம்பும் சிந்தாமணியும் 1977
  19. திராவிட மொழி இலக்கியங்கள் 1984
  20. இளங்கோவும் கம்பனும் 1986
  21. தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் 1998
  22. தமிழில் விடுகதைகள் 1975
  23. தமிழில் விடுகதைக் களஞ்சியம் 2003
  24. காந்தி கண்ட மனிதன் 1969
  25. பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள் 1982
  26. நல்வாழ்க்கை 1992
  27. மனிதம் 1995
  28. மனமும் உயிரும் 1996
  29. உடல் உள்ளம் உயிர் 2004
  30. தமிழர் வாழ்வில் தாவரம் 1993
  31. கூவநூல் 1980
  32. சிலப்பதிகாரம் தெளிவுரை 1998
  33. சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல் 1993
  34. தொல்காப்பியம் தெளிவுரை 1998
  35. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை 2001
  36. திருக்குறள் நயவுரை 2001
  37. திருமுருகாற்றுப்படை தெளிவுரை 2002
  38. சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை 2002
  39. கானல்வரி உரை 2002
  40. பத்துப்பாட்டு உரை 2002
  41. இலக்கணத்தொகை எழுத்து 1967
  42. இலக்கணத்தொகை சொல் 1970
  43. இலக்கணத்தொகை யாப்பு,பாட்டியல் 1978
  44. வீரசோழியம் குறிப்புரையுடன் 1977
  45. தொன்னூல் விளக்கம் குறிப்புரையுடன் 1978
  46. குவலயானந்தம் சந்திரலோகம் 1979
  47. பிரபந்த தீபம் 1980
  48. தொல்காப்பியப் பதிப்புகள் 1992
  49. மொழிக்கட்டுரைகள் 1974
  50. சங்க இலக்கியம் 2006
  51. மெய்யப்பன் தமிழகராதி 2006
  52. தமிழ் இலக்கண நூல்கள் 2007
  53. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 2007
  54. பன்னிரு திருமுறைகள் 2007
  55. Descriptive Grammar of Chilappathikaram 1975
  56. Grammar of Akananuru 1972
  57. Studies in Tamil Language and Literature 1973
  58. Studies in Tamilology 1982
  59. Tolkappiyam in English 2004
  60. சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம் (மலையாளம்) 1966

சான்றுகள்

[தொகு]
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._வே._சுப்பிரமணியன்&oldid=3356627" இலிருந்து மீள்விக்கப்பட்டது