மத்திய தமிழ்
தஞ்சாவூர் தமிழ் (The Thanjavur Tamil dialect ) என்பது தமிழகத்தின் மத்திய பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை காரைக்கால் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பேசப்படும் பேச்சு மொழியாகும். தஞ்சாவூர் தமிழகத்திற்கு அண்டையிலுள்ள கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட இப்பேச்சு மொழியே பேசப்படுகிறது[1][2] . மதுரைத் தமிழும் மத்தியப் பேச்சுத்தமிழ் மற்றும் இலங்கை வட்டார மொழிகளும் தமிழ் மொழியின் தூய்மையான பேச்சுத்தமிழ் வடிவங்களாகக் கருதப்படுகின்றன[3][4]. இவையே தரப்படுத்தப்பட்ட பேச்சுத் தமிழாகவும் திகழ்கின்றன. தமிழ் மொழியில் காணப்படும் பல்வேறு வகையான பேச்சுத்தமிழ் வழக்காறுகளில் மத்தியப் பேச்சுத்தமிழ் கிட்டத்தட்ட பிராமணத் தமிழ் வகையுடன் நெருக்கம் கொண்டுள்ளது[5] .குறிப்பாக உயர் சாதிப் பிரிவினர்களாக கருதப்படும் வெள்ளாளர்கள் மற்றும் முதலியார்கள் இப்பேச்சுத் தமிழைப் பேசுகிறார்கள்.
தஞ்சாவூர் தமிழ் பேசும் ஊர்கள் :-
- சிதம்பரம்
- சீர்காழி
- மயிலாடுதுறை
- திருவிடைமருதூர்
- குத்தாலம்
- கும்பகோணம்
- தரங்கம்பாடி
- பாபநாசம்
- திருவையாறு
- நாகப்பட்டினம்
- கீழ்வேலூர்
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- நன்னிலம்
- காரைக்கால்
- ஒரத்தநாடு
- பட்டுக்கோட்டை
- கூத்தாநல்லூர்
- மன்னார்குடி
- திருத்துறைப்பூண்டி
- பூதலூர்
- குடவாசல்
- வளங்கைமான்
- திருக்குவளை
- வேளாங்கண்ணி
- வேதாரண்யம்
- முத்துப்பேட்டை
- நீடாமங்கலம்
- பேராவூரணி
- அரியலூர்
- பெரம்பலூர்
- திருச்சிராப்பள்ளி
- லால்குடி
- துறையூர் மற்றும்
- குளித்தலை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dravidian case system, Volume 1. Annamalai University. 1976. p. 264.
- ↑ "Language Variation in Tamil". Archived from the original on 2011-07-23. Retrieved 2015-02-22.
- ↑ Sanford B. Steever (1998). Dravidian Languages. Taylor & Francis. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415100232, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-10023-6.
- ↑ Balasubramaniam, K. M. (1934). South Indian Celebrities Vol 1. Madras: Solden & Co. p. 84.