செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்திய அரசின் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்ட மையமாகும். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு 2005 ஆம் ஆண்டில் சூலை மாத இறுதியில் தொடங்கப்பட்ட இந்த மையத்தின் வழியாக தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

செயல் திட்டங்கள்[தொகு]

  • 41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புக்களை வெளியிடுதல்
  • அந்த நூல்களை முக்கிய ஐரோப்பிய, இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தல்

விருதுகள்[தொகு]

இந்த மையத்தின் வழியாக செம்மொழித் தமிழில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் ஆய்வாளர் விருது போன்றவை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றன.

தொல்காப்பியர் விருது[தொகு]

இந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை இந்தியர் ஒருவருக்கு அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது.

குறள் பீடம் விருது[தொகு]

இந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு இருவருக்கு அளிக்கப்படும். இதில் ஒன்று வெளிநாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ஒருவருக்கும், மற்றொன்று வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்கும் அளிக்கப்படுகிறது.

இளம் ஆய்வாளர் விருது[தொகு]

இந்த விருதுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் ஆகியவை ஒரு முறை ஐந்து நபருக்கு அளிக்கப்படும். இந்த விருது ஆண்டிற்கு ஒரு முறை 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]