இடைச்சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடைச்சங்கம் (பொ.ஊ.மு. 2387 - பொ.ஊ.மு. 306) ஏறைக்குறைய 3700 ஆண்டுகள் சிறப்புற்று இருந்த தமிழ்ச் சங்கம் என்று மரபு வழித் தமிழர் வரலாறு கூறுகிறது. இது கபாடபுரத்தில் இருந்தது. இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழி, மோசி, வெள்ளூர் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையர்மாறன், துவரைக்கோன், கீரந்தை என 59 பேர் இச்சங்கத்தில் இருந்தவர்கள். ஏறக்குறைய 3700 புலவர்கள் சங்கத்தில் இருந்தனர்.[1][2]

ஆதரித்த அரசர்கள்:

வென்டேர் செழியன் முதல் முடத் திருமாறன் வரை 59 பேர்.

கவி அரங்கேறியவர்கள் ஐந்து பாண்டியர்கள்.

பாடப்பட்டவை: கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகவல்.

இடைச்சங்க கால இலக்கண நூல்கள்:

1. அகத்தியம்

2. தொல்காப்பியம்

3. மாபுராணம்

4.இசை நுணுக்கம்

5. பூத புராணம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைச்சங்கம்&oldid=3786828" இலிருந்து மீள்விக்கப்பட்டது