சிங்களம் உள்வாங்கிக் கொண்ட தமிழ்ச் சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழிலிருந்து சிங்களத்துக்கு

சிங்களம் உள்வாங்கிக் கொண்ட தமிழ்ச் சொற்கள் (Sinhala Words of Tamil Origin) என்னும் இக்கட்டுரை இலங்கையில் சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளால் சிங்கள மொழியில் உள்வாங்கப்பட்ட தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுகிறது.

சொற்பட்டியல்[தொகு]

சிங்களம் பலுக்கல் பொருள் தமிழ் பொருள் வகை
ආදායම් ஆதாயம வருமானம் ஆதாயம் நயம் வணிகம்
අක්කා அக்கா தமக்கை அக்கா தமக்கை உறவுமுறை
අම්බලම அம்பலம தெருவோரத் தங்குமிடம் அம்பலம் பொதுவிடம் நாடோறும்
ඇම්බැට්ටය எம்பெட்டய நாவிதன் அம்பட்டன் நாவிதன் வணிகம்
ආණ්ඩුව ஆண்டுவ அரசாங்கம் ஆண்டான் தலைவர் நடப்பிக்கை
ආප්ප ஆப்ப அப்பம் அப்பம் அப்பம் உணவு
අරලිය அரலிய அரளி அரளி அரளி நிலைத்திணையியல்
අවරිය அவரிய கருநீல நிலைத்திணை அவுரி கருநீல நிலைத்திணை நிலைத்திணையியல்
චීත්තය (ச்)சீத்தய சீத்தை சீத்தை சீத்தை வணிகம்
එදිරිය எதிரிய எதிர்ப்பு, பகைமை எதிரி போட்டியாளர், பகைவன் படை
ඉඩම இடம தளம், நிலம் இடம் இடம், தளம் அமைப்பு
ඊළ ஈழ ஈழை ஈழை ஈழை நாடோறும்
ඉලක්කය இலக்கய குறி இலக்கு குறி படை
ඉළන්දාරියා இழன்தாரியா இளைய மனிதன் இளந்தாரி இளைய மனிதன் நாடோறும்
ඉළවුව இழவுவ இறப்பு, இறுதிச் சடங்கு இழவு இறப்பு நாடோறும்
ඉරට්ට இரட்ட இரட்டை, இரட்டையெண் இரட்டை இரட்டை, இரட்டையெண் வணிகம்
කඩල (க்)கடல கடலை கடலை கடலை உணவு
කඩය (க்)கடய கடை கடை கடை வணிகம்
කඩියාලම (க்)கடியாலம கடிவாளம் கடிவாளம் கடிவாளம் படை
කංකාණියා (க்)கங்(க்)காணியா மேற்பார்வையாளர் கங்காணி கண்காணிப்பவர் நடப்பிக்கை
කලඳ (க்)கல(ந்)த எடைக்கான சிறு அலகு கழஞ்சு 1.77 கிராம் எடை வணிகம்
කලවම (க்)கலவம கலவை, கலப்பு கலவை கலவை நாடோறும்
කාල (க்)கால காற்பங்கு கால் காற்பங்கு வணிகம்
කළුදෑවා (க்)கழுதேவா கழுதை கழுதை கழுதை நாடோறும்
කම්බිය (க்)கம்பிய கம்பி கம்பி கம்பி வணிகம்
කාන්දම (க்)கான்தம காந்தம் காந்தம் காந்தம் வணிகம்
කණ්ණාඩිය (க்)கண்ணாடிய கண்ணாடி, மூக்குக் கண்ணாடி கண்ணாடி கண்ணாடி, மூக்குக் கண்ணாடி நாடோறும்
කප්පම (க்)கப்பம வரி கப்பம் வரி படை
කප්පර (க்)கப்பர சிறு கப்பல் கப்பல் கப்பல் வணிகம்
කැරපොත්තා (க்)கெர(ப்)பொத்தா கரப்பான் கரப்பான் கரப்பான் நாடோறும்
කරවල (க்)கரவல உலர்ந்த மீன் கருவாடு உலர்ந்த மீன் உணவு
කාසිය (க்)காசிய நாணயம் காசு சிறிதளவிலான மாற்றிய பணம், நாணயம் வணிகம்
කට්ටුමරම් (க்)கட்டுமரம கட்டுமரம் கட்டுமரம் கட்டுமரம் வணிகம்
කිට්ටු (க்)கிட்டு நெருக்கம், அருகே கிட்டு நெருக்கம், அருகே நாடோறும்
කොඩිය (க்)கொடிய கொடி கொடி கொடி நடப்பிக்கை
කොල්ලය (க்)கொல்லய கொள்ளை கொள்ளை கொள்ளை படை
කොම්බුව (க்)கொம்புவ இன் பெயர் கொம்பு ளகரத்தின் பெயர் நாடோறும்
කොණ්ඩය (க்)கொண்டய கொண்டை கொண்டை கொண்டை நாடோறும்
කොත්තමල්ලි (க்)கொத்தமல்லி கொத்தமல்லி கொத்தமல்லி கொத்தமல்லி நிலைத்திணையியல்
කෝවිල (க்)கோவில இந்துக் கோயில் கோயில் கோயில் நாடோறும்
කුඩය (க்)குடய குடை குடை குடை நாடோறும்
කූඩය (க்)கூடய கூடை கூடை கூடை நாடோறும்
කූඩුව (க்)கூடுவ கூடு, கூண்டு கூடு கூடு, சிறு பெட்டி நாடோறும்
කුරුම්බා (க்)குரும்பா இளந்தேங்காய் குரும்பை இளந்தேங்காய் உணவு
කුලිය (க்)குலிய வாடகை கூலி வாடகை நடப்பிக்கை
මලය மலய மலைநாடு மலை வரை இடப்பெயர்
මරක්කලය மரக்கலய படகு மரக்கலம் படகு மீன்பிடி
මස්සිනා மஸ்சினா மச்சான் மச்சினன் மச்சான் உறவுமுறை
මුදල முதல பணம் முதல் முதல் வணிகம்
මුදලාලි முதலாலி வணிகர், கடையொன்றின் உரிமையாளர் முதலாளி வணிகர் வணிகம்
මුදලි முதலி பெயரின் பகுதியொன்று முதலியார் குலப் பெயர் ஒன்று பெயர்
මුරුංගා முருங்கா முருங்கை முருங்கை முருங்கை உணவு[1]
නාඩගම நாடகம மேடை நாடகம் நாடகம் நாடகம், மேடை நாடகம் பண்பாடு
නංගී நங்கீ தங்கை நங்கை இளம்பெண் உறவுமுறை
ඕනෑ ஓனே வேண்டும் வேண்டும் வேண்டும் நாடோறும்
ඔත්තේ ஒத்தே ஒற்றை எண் ஒற்றை ஒற்றை எண் வணிகம்
පදක්කම (ப்)பதக்கம பதக்கம் பதக்கம் பதக்கம் நடப்பிக்கை
පළිය (ப்)பழிய பழி பழி குற்ற உணர்வு, பழி படை
පරිප්පු (ப்)பரிப்பு பருப்பு பருப்பு பருப்பு உணவு
පත්තු කරනවා (ப்)பத்து (க்)கரனவா ஒளியூட்டு, தீ வை பற்று தீப்பிடி நாடோறும்
පොරය (ப்)பொரய போர் போர் போர் படை
පොරොන්දුව (ப்)பொரொன்துவ உடன்படிக்கை, உறுதிமொழி பொருந்து பொருந்து, உடன்படு நாடோறும்
පොරොත්තුව (ப்)பொரொத்துவ தாழ்த்தல், காத்திருத்தல் பொறுத்து காத்திருத்தல் நாடோறும்
සල්ලි சல்லி பணம் சல்லி நாணயம் வணிகம்
සෙරෙප්පුව செரெப்புவ செருப்பு செருப்பு செருப்பு நாடோறும்
සුරුට්ටුව சுருட்டுவ சுருட்டு சுருட்டு சுருட்டு நாடோறும்
තක්කාලි (த்)தக்காலி தக்காளி தக்காளி தக்காளி உணவு
තල්ලු කරනවා (த்)தல்லு (க்)கரனவா தள்ளு தள்ளு தள்ளு நாடோறும்
තනි (த்)தனி தனி தனி தனி நாடோறும்
තරම (த்)தரம அளவு, நிலை, எண்ணிக்கை தரம் தரம் வணிகம்
තාත්තා (த்)தாத்தா தந்தை தாத்தா தாத்தா உறவுமுறை
තට්ටු කරනවා (த்)தட்டு (க்)கரனவா தட்டு தட்டு தட்டு நாடோறும்
උඩැක්කිය உடெக்கிய குறுகிய மேளமொன்று உடுக்கை குறுகிய மேளமொன்று நாடோறும்
උදව්ව உதவ்வ உதவி உதவி உதவி நாடோறும்
උලුක්කුව உலுக்குவ சுளுக்கு சுளுக்கு சுளுக்கு நாடோறும்
උරුමය உருமய வழிவழி உரிமை, உரித்துடைமை உரிமை உரித்துடைமை, உரிமை நடப்பிக்கை
වෙඩි තියනවා வெடி (த்)தியனவா சுடு வெடி சூடு, வெடி படை
වෙරි வெரி குடித்த நிலை வெறி பித்து நாடோறும்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]