புறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புறம் என்பது சங்க இலக்கியத்திலுள்ள இரண்டு வகைகளில் ஒன்று ஆகும். மனித வாழ்க்கை முறை தனிப்பட்ட, பொது என்ற இரு வகைகளைக் கொண்டது. அகம் என்ற இலக்கிய வகை அன்பு, காதல் ஆகியவற்றை கவிதைகளில் கையாள்கிறது. மற்ற இலக்கிய வகையான புறம் என்பது போர், அரசர்கள், புலவர்கள், தனிப்பட்ட ஒழுக்கம் ஆகியவற்றைக் கையாள்கிறது.[1]

தொல்காப்பியம் இவ்விரு வகைகளையும் ஏழேழு திணைகளாகப் வகுக்கின்றது. இதில் ஒன்று தனிப்பட்ட வாழ்வு பற்றியும் மற்றது பொது வாழ்வு பற்றியும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் கூறுகிறது.[2] புறப்பொருள் வெண்பாமாலை வாழ்க்கை முறையைக் கருதாது புறத்தினையை பனிரெண்டு வகைகளாகப் பிரிக்கிறது.

இவ் இலக்கிய வகை வேறுபட்ட மக்களின் வாழ்க்கை முறைச் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறது. அரசர்கள் புகழினால் அவர்களது போர் வாழ்க்கை முறை, கொடை என்பனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புறம் போன்றல்லாது, அகம் தனிப்பட்டவர்களின் பெயரை வெளிப்படுத்துவதில்லை.[3] ஆனால், புறம் தமிழ் இலக்கிய ஆசிரியர்களால் வரலாற்று ஆவணம் போன்று கையாளப்பட்டுள்ளது. இங்கு அரசர்கள், புலவர்கள், இடங்கள் போன்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன.[4]

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

மேலதிக வாசிப்பு[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறம்&oldid=1990849" இருந்து மீள்விக்கப்பட்டது