தமிழ் மரபு அறக்கட்டளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் மரபு அறக்கட்டளை | |
---|---|
![]() தமிழ் பனை ஓலைச்சுவடி | |
நாடு | இந்தியா |
வகை | எண்மிய நூலகத் திரட்டை எளிதாக்கல் |
தொடக்கம் | 2001 |
அமைவிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
சேகரிப்புக்கான அளவுகோல் | தமிழ் கலாச்சார புத்தகம், ஆவணங்கள் |
ஏனைய தகவல்கள் | |
இயக்குநர் | சுபாஷிணி கனகசுந்தரம், நாராயணன் கண்ணன் |
இணையதளம் | தமிழ் மரபு அறக்கட்டளை |
தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஒரு இயக்கமாகும். பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. இவை தமிழ் கூறும் நல்லுகங்களான தமிழ் நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் சமீபத்தில் தமிழர் இடப்பெயர்வு கண்ட ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் காணக் கிடைக்கின்றன. ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியமும் மற்ற பிற கலை வளங்களும், நாட்டிய கர்நாடக இசை வடிவங்களும் காலத்தால் அழிவுற்ற நிலையில் காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.
இத்தகைய தமிழ் மரபுச் சின்னங்கள் காலத்தை வென்று நிற்கக்கூடிய ஒரு வாய்ப்பைச் சமீபத்திய கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறன் அளித்துள்ளது. ஒலி, ஒளி மற்றும் வரி வடிவங்களை இலக்கப்பதிவாக்கி வைய விரிவு வலை மற்றும் மின்காந்த இலத்திரன் வடிவாக நிரந்தரப் படுத்த முடியும். தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ் மரபை இலத்திரன் வடிவில் நிரந்தரப்படுத்த ஏற்பட்டிருக்கும் அகில உலக இயக்கமாகும்."
இவ்வமைப்பானது தலபுராணம் என்னும் திட்டத்தையும் முன்னெடுத்து இலகுவாக தலங்களின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் 2007 தைப்பொங்கல் அன்று வெளியிடப்பட்டது.
இணையக் குழுமங்கள்[தொகு]
- மின்தமிழ் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக முனைவர் சுபாஷிணி கனகசுந்தரத்தினால் நடத்தப்படும் ஓர் இணையக் குழுமமாகும்.
- இ-சுவடி தமிழ் மரபு அறக்கட்டளைக்காக முனைவர் நா. கண்ணனால் நடத்தப்படும் ஓர் இணையக் குழுமமாகும்.
வெளி இணைப்புகள்[தொகு]
- தமிழ் மரபு அறக்கட்டளை
- தலபுராணங்கள்
- தமிழ் மரபு அறக்கட்டளையில் கிடைக்கும் மின்னூல்கள் பரணிடப்பட்டது 2006-11-29 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் மரபு அறக்கட்டளை விளக்கங்கள் பகுதி 1, நா. கண்ணனின் வலைப்பதிவு
- தமிழ் மரபு அறக்கட்டளை விளக்கங்கள் பகுதி 2, நா. கண்ணனின் வலைப்பதிவு