உள்ளடக்கத்துக்குச் செல்

முதனிலைத் திராவிட மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதனிலைத் திராவிட மொழி (ஆங்கிலம்: Proto-Dravidian) என்பது, திராவிட மொழிகளுக்கான முதனிலை மொழி ஆகும். முதனிலை மொழிகள் என்பன கருதுகோள் அடிப்படையிலான மொழிகள்[சான்று தேவை]. இவை மொழியியலாளர்களாற் செய்யப்படுகின்ற மீளுருவாக்கங்கள். அவற்றுக்கு வரலாற்றுப் பதிவுகள் ஏதும் இருப்பதில்லை. இதனால் முதல் நிலைத் திராவிட மொழியும் ஒரு கருதுகோள் அடிப்படையிலானதும், பயன்பாட்டிலுள்ள திராவிட மொழிகளை ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் மீளுருவாக்கம் செய்யபட்டதுமான ஒரு மொழியாகும்[சான்று தேவை].

பிரிவு

[தொகு]

இம்முதனிலைத் திராவிட மொழி, கிமு 500 அளவில் முதனிலை வட திராவிடம், முதனிலை நடுத் திராவிடம், முதனிலைத் தென் திராவிடம் எனப் பிரிந்ததாகச் சிலர்[சான்று தேவை] கூறுகின்றனர். வேறு சில மொழியியலாளர்கள், திராவிட மொழிகளின் துணைக் குடும்பங்களிடையே காணப்படும் வேறுபாடுகளின் அளவைப் பார்க்கும்போது இப் பிரிவு இன்னும் முன்னதாகவே ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்[சான்று தேவை]. எல்லாத் திராவிட மொழிகளையும் உள்ளடக்கி, முதனிலைத் திராவிட மொழி வடிவங்களைக் காட்டும் ஒரே நூல், திராவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி[சான்று தேவை] ஆகும். இதுவும், அதிக விளக்கங்கள் எதுவும் கொடாமல் தொடர்புள்ள சொற்களின் பட்டியலை மட்டுமே தருகிறது.

சொற்கோவை

[தொகு]

சொற்கோவை:[1]

தமிழ்முதனிலைத் திராவிட மொழிஆங்கிலம்
ஒன்று*on-ṯu; *ōr-/*or-V-‘one’
இரண்டு*īr/*ir-V‘two’
மூன்று*muH-/*mū-‘three’ (adj.)
நான்கு*nāl/*nal-V-‘four’ (adj.)
ஐந்து*cay-m-‘five’ (adj.)
ஆறு*caṯ-V‘six’ (adj.)
ஏழு*eẓ-V‘seven’ (adj.)
எட்டு*eṇ‘eight’ (adj.)
ஒன்பது*on-patV‘ten minus one’
பத்து*paH-‘ten’ (adj.)
தலை*tal-ay‘head, hair, top’
கண்*kaṇ‘eye’
மூக்கு*mū-nk(k)u/-nc-‘nose, beak’
பல்*pal‘tooth’
வாய்*wāy‘mouth (edge, beak, mouth of vessel, aperture, blade of sword)’
கை*kay‘hand, arm’
கால்*kāl‘leg, foot’
பால்*pāl‘milk, breast’
எலும்பு*el-V-mp/-nk‘bone’
பெண்*peṇ‘woman’
பெயர்*pin-cc-Vr‘name’
வானம்*wān-am‘sky’
நிலா*nel-a-nc/-ncc‘moon, moonlight’
நீர்*nīr‘water’
ஆறு*yĀtu‘river, stream’
கடல்*kaṭ-al‘sea, ocean’
கல்*kal‘stone’
நாள்*nāḷ‘day’
மரம்*mar-am/-an‘tree’
காய்*kāy‘fruit, pod’
காடு*kā(-n), kā-ṭu‘forest’
புல்*pul‘grass’
நாய்*naH-ay/-att/-kuẓi‘dog’
புலி*pul-i‘tiger’
எலி*el-i‘rat’
பாம்பு*pāmpu‘snake’
இறைச்சி*iṯ-ay-cci‘meat’
எண்ணெய்*ney‘oil, ghee’
மீன்*mīn‘fish’
பேன்*pēn‘louse’
வெண்மை*weḷ/*weṇ‘white’
இனிய*in-‘sweet’ (adj./n.)
புளித்த*puḷ-‘sour’
கசப்பு*kac (> kay)‘bitter; bitterness’
உண்*uHṇ-/*ūṇ-‘to eat, drink’
தின்னு*tiHn-‘to eat’
வா*waH-/*waH-r‘to come’
நடை*naṭ-a‘to walk’
தூக்கம்*tuñc-‘to sleep’
எண்ணு*eṇ‘to count’

மேற்கோள்கள்

[தொகு]
  1. Krishnamurti, Bhadriraju (ப. கிருட்டிணமூர்த்தி). 2003. The Dravidian Languages. Cambridge University Press, ISBN 0-521-77111-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதனிலைத்_திராவிட_மொழி&oldid=3142353" இலிருந்து மீள்விக்கப்பட்டது