இமாச்சலப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இமாசல பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இமாச்சலப் பிரதேசம்
हिमाचल प्रदेश
—  மாநிலம்  —
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தின் அமைவிடம்
அமைவிடம் 31°6′12″N 77°10′20″E / 31.10333°N 77.17222°E / 31.10333; 77.17222ஆள்கூற்று : 31°6′12″N 77°10′20″E / 31.10333°N 77.17222°E / 31.10333; 77.17222
நாடு  இந்தியா
மாநிலம் Himachal Pradesh
மாவட்டங்கள் 12
நிறுவப்பட்ட நாள் சனவரி 25, 1971
தலைநகரம் சிம்லா
மிகப்பெரிய நகரம் சிம்லா
ஆளுநர்
முதலமைச்சர்
ஆளுநர் ஊர்மிலா சிங்[1]
முதலமைச்சர் வீரபத்ர சிங்[2][3]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை[4] (68 seats) ()
மக்களவைத் தொகுதி இமாச்சலப் பிரதேசம்
हिमाचल प्रदेश
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/Himachal Pradesh/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/Himachal Pradesh/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/Himachal Pradesh/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை 6 (21st) (2011)
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.681 (medium) (8th)
கல்வியறிவு 83.78%% 
மொழிகள் இந்தி[5]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
இணையதளம் [http://himachal.nic.in himachal.nic.in]


இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மனாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.

புவியியல்[தொகு]

இமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ.

மாவட்டங்கள்[தொகு]

இமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை காங்ரா, ஹமீர்பூர், மண்டி, பிலாசுப்பூர், உணா, சம்பா, லாஹௌல் - ஸ்பிதி, சிரமௌர், கின்னௌர், குல்லு, சோலன், மற்றும் சிம்லா.

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [6]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 6,077,900 100%
இந்துகள் 5,800,222 95.43%
இசுலாமியர் 119,512 1.97%
கிறித்தவர் 7,687 0.13%
சீக்கியர் 72,355 1.19%
பௌத்தர் 75,859 1.25%
சமணர் 1,408 0.02%
ஏனைய 425 0.01%
குறிப்பிடாதோர் 432 0.01%

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. முதலமைச்சர், இமாசலப்பிரதேசம்
  4. Himachal Pradesh Vidhan Sabha
  5. இமாச்சலப் பிரதேசம் 2008ஆம் ஆண்டு முதல் இந்தி மட்டுமே அதன் அலுவல் மொழியாக தேர்ந்தெடுத்துள்ளது.Hindi to be official language of H.P.
  6. Census of india , 2001

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாச்சலப்_பிரதேசம்&oldid=1641052" இருந்து மீள்விக்கப்பட்டது