அடல் சுரங்கச்சாலை
மேலோட்டம் | |
---|---|
அமைவிடம் | ரோதங் கணவாய், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 32°23′54″N 77°08′51″E / 32.3982°N 77.1475°E |
வழித்தடம் | லே-மணாலி நெடுஞ்சாலை |
செய்பணி | |
பணி ஆரம்பம் | 28 சூன் 2010 |
இயக்குபவர் | எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு |
Traffic | மோட்டார் வாகனஙகள் |
தொழினுட்பத் தகவல்கள் | |
நீளம் | 9.2 கிலோமீட்டர்கள் (5.7 mi) |
தண்டவாளங்களின் எண்ணிக்கை | இரண்டு (பக்கத்திற்கு ஒன்று) |
தொழிற்படும் வேகம் | 80 km/h (50 mph) |
அகலம் | 10 மீட்டர்கள் (33 அடி) |
அடல் சுரங்கச்சாலை (Atal Tunnel) (முன்னர் ரோத்தங் சுரங்கச்சாலை), முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவாக ரோதங் கணவாய் பகுதியில் உள்ள இச்சரங்கச்சாலைக்கு பெயரிடப்பட்டுள்ளது. பிர் பாஞ்சல் மலைத்தொடருக்கு கிழக்கே இமயமலையில் அமைந்த இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரோதங் கணவாய்ப் பகுதியில் மலைகளைக் குடைந்து நிறுவப்பட்ட அடல் சுரங்கச்சாலை, லே-மணாலி நெடுஞ்சாலையில் உள்ளது. இச்சுரங்கச்சாலையில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு வழித்தடங்கள் கொண்டது. அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அடல் சுரங்கச்சாலை 9 கிலோ மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.
இச்சுரங்கச்சாலையால், மணாலி - லே இடையேயான பயணத் தொலைவு 46 கிலோ மீட்டர் குறையும். அடல் சுரங்கச்சாலை இமயமலையில் 3,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இச்சுரங்கப்பணி அக்டோபர் 2017-இல் முடிவுற்றது. அடல் சுரங்கப்பாதை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது.
சுரங்கச்சாலையின் சிறப்புகள்
[தொகு]- கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்த அடல் இச்சரங்கச்சாலை 10 மீட்டர் அகலமும், இரட்டை வழிப்பாதையும் கொண்டதுடன், சுரங்கச்சாலையின் இருபுறங்களில் தலா 1 மீட்டர் அகல நடைமேடைகள் கொண்டுள்ளது.
- சுரங்கச்சாலையில் ஒவ்வொரு 60 மீட்டர் இடைவெளியில் மொத்தம் 300 கண்காணிப்பு கேமேராக்கள் உள்ளது.
- அவசர காலங்களில் சரங்கச்சாலையிலிருந்து வெளியேறுவதற்கு ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியில் ஒரு வெளியேறும் அமைப்பு உள்ளது.
- தீயணைப்பு கருவிகள் சரங்கச்சாலையில் போதுமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.