சம்பா மாவட்டம்
சம்பா மாவட்டம் | |
---|---|
![]() சம்பாமாவட்டத்தின் இடஅமைவு இமாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | சம்பா, இமாசலப் பிரதேசம் |
பரப்பு | 6,528 km2 (2,520 sq mi) |
மக்கட்தொகை | 393,386 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 60.26/km2 (156.1/sq mi) |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |

சம்பா இமாசலப் பிரதேசத்தின் வடமேற்கு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையகம் சம்பா நகரம் ஆகும். இம்மாவட்ட நகரங்களான டால்ஹௌசி மற்றும் ஹஜ்ஜியர் ஆகியவை பிரபலமான மலை வாசத்தலங்களாகும். இவை வட இந்திய மக்களுக்கு விடுமுறையை கழிக்க உதவும் கோடைவாசத் தலங்களாகும்.
பொருளாதாரம்[தொகு]
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சம்பாவை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டங்களான 250 மாவட்டங்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது.[1] இது இமாசலப் பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் நிதி பெறும் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 கணக்கெடுப்பின்படி சம்பா மாவட்டத்தின் மக்கட்தொகை 518,844.[2] இது தோராயமாக கேப் வேர்ட் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன்மூலம் இந்தியாவின் 640 மாவட்டங்களில் இது 544வது இடத்தில் உள்ளது.[2] சம்பா மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 80 inhabitants per square kilometre (210/sq mi) .[2] இதன் மக்கட்தொகை வளச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.58 %.[2] சம்பாவின் பாலின விகிதப்படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கல்வியறிவு விகிதம் 73.19 %.[2]
மொழிகள்[தொகு]
குறைந்தபட்சம் 100 000 பேர் சம்பா மாவட்டத்தில் டோக்ரி-காங்ரி மொழியை பேசுகின்றனர்.[4]
ஆட்சி[தொகு]
இந்த மாவட்டம் பாங்கீ, சுராஹ், சலூனீ, பலேய், டல்ஹௌசி, படியாத், சிஹுந்தா, சம்பா, ஹோலீ, பர்மௌர் ஆகிய வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf. பார்த்த நாள்: September 27, 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population" இம் மூலத்தில் இருந்து 2011-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927165947/https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html. பார்த்த நாள்: 2011-10-01. "Cape Verde 516,100 July 2011 est."
- ↑ "Bhattiyali: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.