நற்கு வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நற்கு வனவிலங்கு சரணாலயம்
நற்கு வனவிலங்கு சரணாலயம் உல் ஆற்றிலிருந்து
அமைவிடம்மண்டி மாவட்டம் இமாச்சலப் பிரதேசம்
Nearest cityமண்டி
பரப்பு132.3731 km2 (51.1095 sq mi)

நற்கு வனவிலங்கு சரணாலயம் (Nargu Wildlife Sanctuary) என்பது இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உல் ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது சரணாலயமாக 1999-ல் அறிவிக்கப்பட்டது. இச்சரணாலயம் 132.37 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. சரணாலயத்தின் சரிவுகளில் ஆல்பைன் காடுகள் காணப்படுகின்றன. இச்சரணாலயம் பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் தாயகமாக உள்ளது.[1]

நிலவியல்[தொகு]

சுமார் 278 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த சரணாலயம் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 23-ல் இமாச்சலப்பிரதேச அரசால் அறிவிக்கப்பட்டது. 29 நவம்பர் 2013 அன்று, எல்லைகளை வரையறை செய்ததன் காரணமாக, பரப்பளவு 132.3731 km2 (51.1095 sq mi) ஆகக் குறைக்கப்பட்டது. இச்சரணாலயம் வடக்கு32°06′49″N 76°56′35″E / 32.11361°N 76.94306°E / 32.11361; 76.94306 (NarguWLS North), கிழக்கு31°52′54″N 77°04′50″E / 31.88167°N 77.08056°E / 31.88167; 77.08056 (NarguWLS East), தெற்கு31°48′42″N 77°02′41″E / 31.81167°N 77.04472°E / 31.81167; 77.04472 (NarguWLS South), மேற்கு32°01′39″N 76°51′31″E / 32.02750°N 76.85861°E / 32.02750; 76.85861 (NarguWLS West) புவிசார் ஒருங்கிணைப்புகளுக்குள் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் குல்லு மாவட்டத்தின் குல்லு வனப் பிரிவின் கீழ் வருகிறது. இருப்பினும் இதன் சில பகுதிகள் மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2]

அணுகல்[தொகு]

  • விமான நிலையம்:- புந்தார் (குல்லு)
  • தொடருந்து நிலையம்: ஜோகிந்தர்நகர் (40 கி. மீ. தொலைவில்)
  • சாலை:- சரணாலயம் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nargu Wildlife Sanctuary". WildTrails Recent Sightings | The One-Stop Destination for all your Wildlife Travels (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
  2. Forest Department, Principal Secretary (Forests) (29 Nov 2013). "Notification No. FFE-B-F(6)-16/1999-Nargu" (PDF). Government of Himachal Pradesh. பார்க்கப்பட்ட நாள் 3 Jul 2021.

வெளி இணைப்புகள்[தொகு]