மணாலி வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணாலி வனவிலங்கு சரணாலயம் வட இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு வனவிலங்கு காப்பகம் ஆகும்.

வரலாறு[தொகு]

மணாலி வனவிலங்கு சரணாலயத்தின் பரப்பளவு சுமார் 31.8 சதுர கிலோமீட்டர்கள். 1933ஆம் ஆண்டின் பஞ்சாப் பறவைகள் மற்றும் காட்டு விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பின்வரும் பகுதி பிப்ரவரி 26, 1954 அன்று சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

இது மணாலியிலிருந்து சுமார் 2 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1] இது மணல்சு காட் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். மணாலி மரக்கட்டைகள் மற்றும் தூங்கி கோயிலிலிருந்து ஒரு பாதை அடர்ந்த தியோதர், கைல், குதிரை கசுக்கொட்டை, வாதுமைக் கொட்டை மற்றும் மேப்பிள் காடுகள் வழியாகச் செல்கிறது. இச்சரணாலத்தைப் பார்வையிடச் சிறந்த காலம் மே முதல் அக்டோபர் வரை ஆகும்.

விலங்குகள்[தொகு]

கத்தூரி மான், மோனல் மற்றும் பழுப்பு கரடி, சிறுத்தை மற்றும் பனிச்சிறுத்தை ஆகியவை இங்குக் காணப்படும் பொதுவான விலங்குகளில் சில. கோடையில் பனிப்பாறை மண்டலத்தில் இபெக்ஸ் காட்டாடு மந்தைகள் இடம்பெயர்வதைக் காணலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-03-08. பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.
  2. "Manali Wildlife Sanctuary in Manali". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-08.

வெளி இணைப்புகள்[தொகு]