கன்வார் சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்வார் சரணாலயம் (Kanwar Sanctuary) இமாச்சலப்பிரதேச குலு மாவட்டத்தில் பர்பதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. கசோல் வனச்சரக அலுவலர் பார்வையாளர்களுக்குத் தேவையான தகவல் மற்றும் உதவியினை வழங்குகிறார். கசோலிலிருந்து அடர்ந்த தியோதர் மற்றும் பிர் காடுகள் வழியாகக் காரகன் நாலா வழியாக மேல்நோக்கி நடப்பது மகிழ்வானது. இந்த சரணாலயத்தில் இமயமலை வரையாடு அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது.[1]

  • வானூர்தி நிலையம்: புந்தார் (குலுவிலிருந்து 10 கி. மீ. தொலைவில்)
  • தொடருந்து நிலையம்: அருகிலுள்ள தொடருந்து நிலையம் ஜோகிந்தர்நகர் (95 கி. மீ. குலுவிலிருந்து)
  • சாலை: நன்கு இணைக்கப்பட்டுள்ளது
  • தில்லி வழி மண்டி: 530 கி. மீ.
  • சிம்லா: 240 கி. மீ.

மேற்கோள்கள்[தொகு]

  1. "himachaltourism.gov.in". 24 March 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 February 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்வார்_சரணாலயம்&oldid=3399709" இருந்து மீள்விக்கப்பட்டது