மணிகரண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மணிகரண் (Manikaran) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின், குல்லு மாவட்டத்தில், பார்வதி பள்ளத்தாக்கில், பார்வதி ஆற்றின் கரையில் அமைந்த புனிதத் தலமாகும். இமயமலையில் அமைந்த மணிகரண் கடல்மட்டத்திலிருந்து 1760 மீட்டர் உயரத்தில் உள்ளது. குல்லு நகரத்திலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு பழையான இந்துக் கோயில்கள் மற்றும் குருத்துவார் உள்ளதால், இவிடம் இந்துக்களுக்கும் மற்றும் சீக்கியர்களுக்கும் புனித தலமாக உள்ளது. மேலும் இங்கு வெந்நீர் ஊற்றுகள் உள்ளது. சீக்கியர்களின் குருவான குரு நானக், மணிகரண் புனிதத் தலத்திற்கு யாத்திரையாக சென்றார் என்பது சீக்கியர்களின் நம்பிக்கை.

மணிகரணின் புனிதத் தலங்கள்[தொகு]

வெந்நீர் ஊற்றில் குளிக்கும் யாத்திரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும், மணிகரண் குருத்துவார் வளாகம்

மணிகரணில் சிவன், பார்வதி, அனுமான், இராமர், கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பல இந்து சமயக் கோயில்களும் மற்றும் சீக்கிய சமய குருத்துவாரும் உள்ளது.[1] [2]மணிகரண் வெந்நீர் ஊற்றுகளுக்கும், இயற்கை காட்சிகளுக்கும் பெயர் பெற்றது.[3]

படக்காட்சிகள்[தொகு]

மணிகரண் காணொலி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manikaran Travel Guide". பார்த்த நாள் 2006-09-23.
  2. "Lord Shiva, the principle deity of Himachal Pradesh". பார்த்த நாள் 2006-09-23.
  3. "Hot Springs in Himachal Pradesh". பார்த்த நாள் 2006-09-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிகரண்&oldid=2575885" இருந்து மீள்விக்கப்பட்டது