பிலாஸ்பூர்-மணாலி-லே இருப்புப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிலாஸ்பூர்–மணாலி -லே இருப்புப்பாதை
பொதுத் தகவல்
நிலை
  • சர்வே அறிக்கை  – முடிவடைந்தது.
  • சாத்திய அறிக்கை  – முடிவடைந்தது.
  • திட்டக்குழு மதிப்பீட்டு அறிக்கையை ஆராய்தல்  – முடிவடைந்தது
  • திட்டக்குழு ஒப்புதல் வழங்குதல்  – ஆம்
  • நில எடுப்புப் பணி  – இல்லை
  • கட்டுமானப் பணி  – துவக்கப்படவில்லை
வட்டாரம்இமாசலப் பிரதேசம் மற்றும் லடாக், இந்தியா
முடிவிடங்கள்பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்)
லே, லடாக்
சேவைகள்பிலாஸ்பூர்மண்டி- மணாலி-குலு-கேலாங்-லே
இணையதளம்http://www.indianrailways.gov.in
தொழில்நுட்பத் தகவல்
தண்டவாள அகலம்1,676 மிமீ (5 அடி 6 அங்)
Highest elevation5,359 m (17,582 ft) தங்லாங்க்லா

பிலாஸ்பூர்-மணாலி-லே இருப்புப் பாதை (Bilaspur–Leh line) இந்தியாவின் இமயமலைவில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி நகரத்தையும் மற்றும் லடாக் பகுதியில் உள்ள லே நகரத்தையும் இணைக்க 468 கிலோ மீட்டர்[1] (309 மைல்) நீளமுள்ள அகல இருப்புப் பாதையை அமைக்க [2][3]இந்திய இரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசின் திட்டக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.[4][5]இந்த இருப்புப் பாதையில் அமைக்கப்படும் தங்லாங்க்லா தொடருந்து நிலையம் 5,359 மீட்டர் (17,582 அடி) உயரத்தில் அமைக்கப்படுகிறது.

2011-2012-ஆண்டின் இரயில்வே பட்ஜெட்டில் இந்த இருப்புப் பாதை திட்டம் வரும் ஆண்டுகளிலிருந்து தொடரும் என அறிவிக்கப்பட்டது.[6][7][8] 2016 செப்டம்பர் இறுதியில் வடக்கு இரயில்வ இருப்புப் பாதை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு லே நகரத்தில் அலுவலகம் அமைத்துள்ளது. [9]

திட்ட முன்னேற்றம்[தொகு]

இருப்புப் பாதை அமைக்க லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சி மன்றத்திடம் இருப்புப் பாதை திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தி வழங்க இந்திய இரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.[10] சூன் 2017-இல் இத்திட்டப்பணிக்கு இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அடிக்கல் நாட்டினார்.[11]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]